
கருமிகள் உறவினராகவும் மாட்டார்கள். நண்பர்களாகவும் மாட்டார்கள்.
- லாபுரூயர்.

செயல் புரிபவர் அனைவரும் சிந்திப்பவர்களின் அடிமையே.
- ஹின்.

ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே.
- ராபர்ட் கோலியன்.

கல்வி கற்பது ஒரு பணியோ சிக்கலோ சுமையோ அல்ல. உலகில் வாழ அது ஒரு வழி.
- ரிச்டெர்.

மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழையாக மாட்டான்.
- ஹிட்ச்காக்.

உலகில் கூறப்படும் அழகான கருத்துக்கள் அனைத்தும் ஒரு நல்ல செயலுக்கு ஈடாகாது.
- ரஸ்ஸல்.

அளவுக்கு அதிகமான ஓய்வு மிதமிஞ்சிய வேதனையாகும்.
- ஹோமர்.

உலகத்தை வெறுக்கலாம். ஆனால் உலகம் இன்றி வாழ முடியாது.
- எலியட்.

பிறந்ததற்காக அழும் குழந்தை அறிவுள்ளதுதான்.
- பார்சி.

கூலி கொடுப்பவனை ஊனமாக்கி கூலி வாங்குபவனுக்கு உதவ முடியாது.
- லிங்கன்.

இன்பம் துய்க்க எண்ணினால் பிறர் இன்பமடைய வழி செய்ய வேண்டும்.
- பிளாட்டோ.

அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.
- ஜவஹர்லால் நேரு.

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காணும் கனவு.
- பிளினி.

எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.
- சைரஸ்.

உடலுக்கு உணவு தேவையானது போன்று உள்ளத்துக்குப் பண்பாடு தேவை.
- ஹாரே.

அதிர்ஷ்டம் அடுத்தவர்களின் உழைப்பிற்கும் தகுதிக்கும் நாம் தரும் அநியாயமான பெயர்.
- தாமஸ் பெயின்.

புத்தகங்கள் இல்லாத வீடு உயிரில்லாத உடலைப் போன்றது.
- பென்னெட்.

உதவியின் மதிப்பு உதவுகின்றவனின் மதிப்பு அளவேயாகும்.
- டென்னிசன்.

சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
- ஹெர்பர்ட்.

விரைவில் புகழ் பெற்றவன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.

அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது.
- ரூசோ.

ஆசைகளைத் திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.
- ஹீபர்.

சரியானது எது என்று உணர்ந்த பின்பும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் கோழைத்தனம்.
- கன்பூசியஸ்.

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.

எங்கெல்லாம் கட்டுப்பாடு அதிகமாகிறதோ, அங்கெல்லாம் கள்ளத்தனம் தானாகவே குடியேறி விடும்.
- பிராங்க்ளின்.