ஆபத்து வருவதை அறிந்து கொள்ள முடியுமா?
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.
-காமராஜர்
உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும் பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்; நீடிக்கும்.
- பால்ஜாக்
வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.
- நெல்சன்
உழைப்பு தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம் எனும் மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது.
- வால்டேர்
செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.
- மாத்யூஸ்
கோவிலுக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி,கடவுளை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள் புரிய தடையேதுமில்லை.பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்,தெய்வ அருளுக்கு பாத்திரமாகிவிடுவோம்.
-பாரதியார்
பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்; படிக்காமல் எதிலும் கையெழுத்துப் போடாதீர்கள்.
- ஸ்பானிஷ்
மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம் கிடைத்தே தீரும்.
- எமர்சன்
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!
- அப்துல்கலாம்
பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான் இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு சங்கிலியைப் போன்று மாறி விடும்.
- எட்வர்ட்ஸ்
ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது; ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.
- கதே
செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்; செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.
- சாக்ரடீஸ்
வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள். வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.
- இங்கர்சால்
இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.
- வால்டேர்
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்.
- சேகுவாரா
மன அமைதி பெற நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன். பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன் குறைகளைக் காண்.
- அன்னை சாரதாமணி
நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்; கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.
-விவேகானந்தர்
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனது முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும்
செத்துவிடுவதில்லை...
-பெரியார்
உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை நீ பெற்றிருக்க வேண்டும்.
- ஜார்ஜ்எலியட்
வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
- இங்கர்சால்
ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும்.
- மகாத்மா காந்தி
எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும். உழைப்பே இன்பம் தரும்.
- பஸ்கால்
வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.
- ஹார்கி ரோவ்
ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
-வால்டேர்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.