
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
- டெஸ்கார்டஸ்.

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
- ஜார்ஜ் பெர்னாட்ஷா.

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
- மகாத்மா காந்தி.

முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம்.
- கோல்டன்.

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
- கன்பூசியஸ்.

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
- கவிஞர் கண்ணதாசன்.

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
- சாக்ரடீஸ்.

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.
- வில்லியம் பிளேக்.

எக்கணமும் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடம் திறமைகள் தாமே வந்து ஒட்டிக்கொள்ளும். தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே நிலையான புகழை ஈட்ட முடியும்.
- ஹெரால்டு.

செயல்படும்போது அதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த நினைவில் உங்களுடைய சிந்தனையையும் செயலினையும் ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.
- எம்.ஆர். காப்மேயர்.

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
- ஜேம்ஸ் டக்ஸில்.

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
- அன்னை தெரசா.

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
- வோயாஸ்.

தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.
- எமர்சன்.

எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.
- லெனின்.

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும்.
- கவிஞர் ஹோமர்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.
- கீட்ஸ்.

உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.
- லா ஓட்ஸ்.

வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
- ஹென்றி டேவிட் தேரோ.

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
- டாக்டஸ்.