
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
- சுவாமி விவேகானந்தர்

வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
- காண்டேகர்

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
- பாரதியார்

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
- புத்தர்

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
- காந்திஜி

அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
- கன்பூசியஸ்

நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
- மிக்கேல் லேர்மொண்டஸ்

வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை. தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு...!
- கவிஞர் சுகி

நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.
- ஷேக்ஸ்பியர்

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
- எட்மன்ட் பார்க்

ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள். அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள். எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.
- ரான் ஹாலன்ட்

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
-மாவீரன் நெப்போலியன்

வாழ்க்கை என்பது ஒரு சுமை, அதைத் தாங்கிக் கொள்; அது ஒரு முள் கிரீடம் அதை அணிந்து கொள்.
- அப்ராம் ரியான்

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ...?
- ரஸ்கின்

நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோதும் மனம் தளராதே...!
- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி