சேவல் யாருக்கு முட்டையிடும்?

ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.
– பிராய்டு.

தேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன்.
– புனித அகஸ்தினார்.

அதிர்ஷ்டசாலிக்குச் சேவல் கூட முட்டையிடும்.
– கிரீஸ்.

சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை.
– ஆண்டர்சன்.

தேவையில்லாததை நீ வாங்கினால் தேவையானதை நீ விற்று விடுவாய்.
– கிளாரண்டன்.

உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது. அதையாராலும் மூடி மறைக்க முடியாது.
– மில்டன்.

குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது. அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.
– பொலிவியா.

விசிறியை அசைக்காமல் காற்று வராது. வியர்வை சிந்தாமல் உயர்வு வராது.
– ஜப்பான்.

ஆசை புத்தியை மறைக்கும்போது அறிவு வேலை செய்யாமல் போய்விடுகிறது .
– கவியரசு கண்ணதாசன்.

சோம்பேறிகள் முன் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்க வேண்டுமே என்று அழுவார்கள்.
– அரேபியா.

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக்கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.
– அரிஸ்டாட்டில்.

ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.
– மார்க்ஸ் அரேலியஸ்

புத்தகங்கள் இல்லாத வீடு சன்னல்கள் இல்லாத வீடாகும். புத்தகங்கள் இல்லாத வீட்டில் குழந்தைகளை வளர்க்காதீர்கள்.
– ஹோரேஸ்பான்.

அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார்.
– ஆல்டல் ஆக்ஸ்லி.

நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
– டால்ஸ்டாய்.

இந்த மண்ணில் வாழ்வதற்கு நாம் வாடகை தர வேண்டும். சக மனிதர்ளுக்கு நாம் செய்யும் தொண்டுதான் அந்த வாடகை.
– வில்பிரட் கிரென் வெல்ட்.

ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.
– வால்டேர்.

சிறிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதால்தான் நாம் பெரிய தவறுகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறோம்.
– மதாம் நெக்கேர்.

நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நான் முறையாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
– மாவீரன் அலெக்ஸாண்டர்.

தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வகுப்பதுமே கல்வி.
– பெஸ்டலசி.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.