எந்தக் குழந்தை அதிர்ஷ்டசாலி?

தேவைக்கு மேலுள்ள பொருள், தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.
- தோரோ.

நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.
– விவேகானந்தர்.

செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.
– முகம்மது நபிகள்.

சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது.
– ஆஸ்கர் ஒயில்ட்.

சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
– கன்ஃபூசியஸ்.

ஒழுக்கம் என்பது வெள்ளைக்காகிதம் போன்றது. ஒரு முறை கறை பட்டால் மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது.
– ஹாவ்ஸ்.

கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.
– மகாகவி மில்டன்.

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்ரை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
- லெனின்.

ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
– ஹால்டேன்.

தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.
– ஃபிராங்கிளின்.

பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும். தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும்.
– லியனார்டோ டாவின்ஸி.

உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
– அரிஸ்டாட்டில்.

ஒரு மாவீரனையும் ஒரு பெரிய மனிதனையும் எடை போட்டால், அவர்கள் ஒரு நல்ல மனிதனுக்குச் சமமாக மாட்டார்கள்.
– லபுருயேர்.

மனமே பதற்றமடையாதே! மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும். தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்.
– கபீர்தாசர்.

அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி.
– ஜான் மெக்காலே.

ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.
– ஒயிட்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.