எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே...

ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது!
– ஸ்ரீ ராமகிருஷ்ணர்

கோபம் அன்பை அழிக்கும். கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்!
–மகாவீரர்

கடுமையாக உழைப்பவனுக்குக் கவலைப்பட நேரமில்லை!
– சாணக்கியர்

கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!
– ஸ்ரீ அன்னை

தன் எடையைப் போல் பத்து மடங்கு அதிக எடையுள்ள தானியத்தை எளிதில் சுமக்கும் எறும்பைப் பார்த்துமா உங்கள் சிந்தனை இன்னும் விழிக்கவில்லை.
– திரு.வி.க

பிறர் குற்றங்களைக் காண முயல்பவன் அரை மனிதன்.
– வேட்லி

நறுமண மலர்களோ மெதுவாக மலரும். களைகளோ வேகமாக வளரும்.
– ஷேக்ஸ்பியர்

நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.
- ஜார்ஜ் எலியட்

தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, காலால் நடப்பதற்குப் பதிலாக தலையால் நடப்பது போன்றது.
– எமர்சன்

தம்மிடமுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும்.
– கதே

கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்.
– எட்மண்ட் பர்க்

உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே. இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால் காடு அமைதியாகி விடும்.
– ஹென்றி வேன்டேக்

நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும். கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டு இருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும்.
– புத்தர்

எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே.
– இராமலிங்க வள்ளலார்

பணத்தின் மீது நம்பிக்கை வைக்காதே. நம்பிக்கை மீது உன் பணத்தை வை.
– ஹோம்ஸ்

நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம். ஒன்றும் செய்யாமல் இருத்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல், தவறாகச் செய்தல், காலமற்ற காலத்தில் செய்தல்.
– வொல்தேர்

நாம் படிக்கப்படிக்கத்தான் நம்மிடமுள்ள அறியாமையைக் கண்டு கொள்கிறோம்.
– கவிஞர் ஷெல்லி

சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது. சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது. உண்மை எல்லா மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது.
– இங்கர்சால்

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம்.
– ஷேக்ஸ்பியர்

உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள். உனக்குள்இருக்கும் உள்ள இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று – ஒன்று பகைவனை நண்பனாக ஆக்குதல், இரண்டு கெட்டவனை நல்லவனாக மாற்றுதல், மூன்று படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்.
– டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.