கப்பல் தயாரிக்கப்படுவது எதற்கு?

சிறுசிறு செலவுளைப் பற்றிக் கவனமாயிரு. ஒரு சிறு ஓட்டையே பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும்.
– பெஞ்சமின் பிராங்கிளின்.

உலகம் களிமண்ணைப் போன்று மிருதுவானது இல்லை. இரும்பைப் போன்று மிகவும் உறுதியானது. நீ உன் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும்தான் இந்த உலகத்தில் உனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
– எமர்சன்.

வாழ்க்கையில் உயரிய குறிக்கோளின்றி அங்குமிங்கு்ம் அலைந்துவிட்டுக் கடைசியில் வெற்றாய் முடிவது மனித வாழ்வாகாது.
– அஸ்லாமா இக்பால்.

பொறாமையினால் ஒருவனின் மனதில் உருவாகும் விஷம் இறுதியில் அவனையே அழித்து விடும்.
– நியெட்ஸே.

மன நிறைவுதான் ஒருவனைப் பணக்காரனாக்குகிறது; பேராசைக்காரர்களிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள்.
– சாஅதி.

தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப் பணியாகும்.
– திரு. வி. க.

கடமையைச் செய்யத் துணிவுடன் இரு. அதுவே உண்மையான வீரத்தின் சிகரம்.
– சிம்மன்ஸ்.

வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது.
– பெர்னார்ட் ஷா.

நூறு முறை உளியால் அடித்தும் சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை, நூற்றி ஒன்றாவது முறை அடிக்கிறபோத உடையும். அது கடைசி அடியால் உடையவில்லை. அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது.
– ஜேக்கப்ரைஸ்.

ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்.
– கார்ல் மார்க்ஸ்.

ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையைத் தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.
– நேரு.

எங்கும் இருள் என்பது கிடையாது. அறியாமைதான் இருள். அந்த அறியாமை இருளை விரட்ட நாம் உலகமெங்கும் அறிவொளியைப் பரப்புவோம்.
– இங்கர்சால்.

நான் தெரிந்து கொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்.
– ஆபிரகாம் லிங்கன்.

உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.
– சாக்ரடீஸ்.

எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால் அதற்காகக் கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது.
– கிரேஸ் முர்ரே ஹாப்பிர்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.