அறிவின்மை கேவலமா...?
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை.
– செஸ்டர்பீல்டு.
மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது.
– தாகூர்.
நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
– மூர்.
சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிக்க் கடினமானதாக இருக்காது.
– ஹென்றி போர்ட்.
நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் எல்லா நோய்களுக்கும் ஒரே மலிவான மருந்து.
– கௌலி.
கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்துத் திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே.
– கிப்பன்.
உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லை. அவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன.
– லிடர்மென்.
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
– கன்ஃபூஷியஸ்.
துன்பம் ஒரு பழம் போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை.
– உய்கோ.
நான் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தாலும்கூட அந்த வேலையிலும் நானே சிறந்த துப்புரவுப் பணியாளனாக இருப்பேன்.
– சுவாமி விவேகானந்தர்.
கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது.
– நெப்போலியன் ஹில்.
உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சம்மானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான்.
– சாக்ரடீஸ்.
மனிதன் தன் பெரும்பாலான துன்பங்களைத் தன் பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கிறான்.
– ரேபியா.
புத்தகங்கள் மிகவும் விந்தையானவை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்பவரிடமும் நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்தவர்க்ளிடமும் நாம் நேரிடையாக உரையாடி இன்பமுறச் செய்பவை புத்தகங்களே.
– கிங்ஸ்லி.
இந்தச் சிக்கல் கடினமானது என்று சொல்லாதீர்கள். கடினமாக இல்லாவிட்டால் அது சிக்கலே இல்லை.
– ஃபோஷ்.
பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வ்ந்து சேர்ந்துவிடும்.
– சுவாமி விவேகானந்தர்.
தேவைப்படும்போது தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்தான் அறிவாளி.
– டாக்டர் ஜான்சன்.
நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்.
– ஷெல்லி.
ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல. நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி.
– ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்.
சீருடன் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் இருப்பதற்கு பணம் அதிகம் தேவைப்படாது.
– மகாத்மா காந்தி.
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
– அரிஸ்டாட்டில்.
நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.
– லாங்ஃபெல்லோ.
வெற்றி என்பது முழுத் தியாகமும் செய்த பின்னரே கிடைக்கக்கூடிய ஒன்று.
– ஜவஹர்லால் நேரு.
ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.
– சார்லஸ் பக்ஸ்டன்.
வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை.
– ரிச்சர்ட் சாண்டர்ஸ்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.