மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார்?
பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்!
– புத்தர்.
பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.
– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.
மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.
– விவேகானந்தர்.
உண்மைக்குப் பகை உள்ளத்தில் தோன்றும் பயம்.
– இராஜாஜி.
ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோமும் கிடையாது.
– காந்திஜி.
மனித மனத்தில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகின் மிகச் சிறந்த வைரங்கள்.
– பீட்டர் மார்சன்.
அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன.
– சாமுவேல் ஜான்சன்.
ஒவ்வொரு தடவையும் விழுவது மீண்டும் எழுவதற்கே என்று நம்புங்கள்.
– ஷேக்ஸ்பியர்.
தன்னால் இயன்றதைச் செய்பவன் வீரன். மற்றவர்கள் அதைச் செய்வதில்லை.
– ரோமென் ரொலான்.
ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை.
– சிசரோ.
சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள்.
– டாரா ஆல்பர்ட்.
வாழ்க்கை என்பது ஒரு துணிவு மிக்க வீரச் செயல்.
– ஹெலன் கெல்லர்.
இந்த உலகத்தில் நாம் செய்யும் மிகவும் நல்ல பயணம், ஒருவரை நோக்கி ஒருவர் செல்வதுதான்.
– போல் மொரானோ.
எரிகிற விளக்காக இரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
– தாகூர்.
மிக அதிகமானவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன்.
– திதெரோ.
மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்.
– மு. வரதராசன்.
மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார் தெரியுமா? பிற மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தனக்காக வாழும் மனிதர்கள்தான்.
– ஹெய்ன்.
வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன. அதைப் போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன.
– மகாவீரர்.
திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
– ஹேஸ்டர் பீல்.
வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!
– டால்ஸ்டாய்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.