ஒரே புத்தகத்தை ரசிக்கும் இருவருக்கிடையே மலரும் நட்புக்கு இணையானது எதுவும் இல்லை.

ஒவ்வொரு நல்ல செயலும் நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை ஒளியைக் கொடுக்கிறது.
– ரஸ்கின்.

திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும் பெற்றெடுத்த அழகுக் குழந்தையே புகழ்.
– பாஸ்கல்.

பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே வெற்றி கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கிறது.
– ஹெக்டர்.

தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
– ஃபிராங்க்ளின்.

உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது.
– தாமஸ்.

தோல்வி என்பது உண்மையை நிலைநாட்ட ஏற்படும் அனுபவம்.
– பீச்சர்.

பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும்.
- ஹென்றி ஃபீல்டிங்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.