நம்பிக்கை இழந்தவன்
 கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை, கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர்.
– மரேஷால்.
 உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
– ஜார்ஜ் பெர்னாட்ஷா.
சிறந்த செயல்களே சிறந்த வழிபாடு.
– குரு நானக்.
வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்.
– மகாவீரர்.
எவரால் மனித இனத்திற்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர்.
– நபிகள் நாயகம்.
உலகமே என் கோவில். நன்மை செய்வதே என் மதம்.
– ஹீன்.
என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். நான் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன்.
– மாஜினி.
சமுதாயம் என்பது மனிதர்களின் ஒற்றுமைதான்.
– ரூசோ.
நம்பிக்கை இழந்தவன் பிணத்துக்கு ஒப்பாவான்.
– வைட் டியர்.
நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம்.
– வில்லியம் ஜேம்ஸ்.
பசித்தோருக்கு உணவிடுவதே என் மதம். வறியவரிடமும் பாமரரிடமும் அன்புடன் பழகுபவரே என் கடவுள்.
– விவேகானந்தர்.
நம்பிக்கை உண்டானால் வெற்றியும் உண்டு.
– மகாகவி பாரதியார்.
கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
– லால்பகதூர் சாஸ்திரி.
நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
– வள்ளலார்.
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பத்தைவிட வேறு அவமானமில்லை.
– காந்தியடிகள்.
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று. ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்.
– ரஸ்கின்.
சான்றோன் ஆக்காத கல்வி, சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்.
– போலிங் புரூக்.
உண்மையை நேசி, பிழையை மன்னித்துவிடு.
– வால்டேர்.
விடுதலை பெறும்போதுதான் உண்மையைக் காண முடிகிறது.
– தாகூர்.
நல்ல செயலுக்கு நல்ல வட்டி கிடைக்கும்.
– மில்டன்.
மௌனம் என்ற மரத்தில் அமைதி எனும் கனி தொங்கும்.
– பாஸ்கல்.
படிப்பு என்ற மெழுகுவர்த்திக்கு ஆர்வமே திரி.
– யாரோ.
நேர்மையான உழைப்பில் கௌரவம் இருக்கிறது.
– க்ளீவ் லாண்ட்.
கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிடக் கீழானது.
– லெஸ்ஸிங்.
அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை!
– அரவிந்தர்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|