கல்வியைப் பற்றி சில அறிஞர்கள்
இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்!
– யூரிபிடிஸ்.
கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!
– பிளேட்டோ.
கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!
– எட்மண்ட்பர்க்.
ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.
- மகாகவி பாரதி.
சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!
– போலிங் புரூக்.
தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!
– பெஸ்டலசி.
ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
– ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்.
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.
– தந்தை பெரியார்.
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்!
– ரஸ்கின்.
வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!
– பெர்னார்ட்ஷா.
நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்!
– மூர்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.