* பெரிய சாதனைகளை செய்யாமல் துன்பப்படுவதை விட, சிறிய சாதனைகளை முழு அன்புடன் செய்து முடிக்கலாம்.
* நம்மை சூழ்ந்துள்ள இடங்கள் சுத்தமாக இல்லை என்றால், மேடை அமைத்து பேசும் நேரத்தில் சிறிது நேரத்தை கொண்டு நாமே சுத்தம் செய்யலாம்.
* அன்பின் அட்சய பாத்திரம்! கருணையின் உண்மை உருவம்! தாய்மையின் உன்னத அடையலாம்!
* நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
* வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
* உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.
* நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
* உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.
* அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
* ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
* வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
* உனக்கு உதவியோரை மறக்காதே; உன்னை நேசிப்பவரை வெறுக்காதே; உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.
* சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
* நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
* இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்…!
* இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்?
* உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
* பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால் அத் துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
* எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் ?
* அமைதியின் பலன் பிரார்த்தனை, பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை, நம்பிக்கையின் பலன் அன்பு, அன்பின் பலன் சேவை, சேவையின் பலன் அமைதி.
* நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?
* தலைவன் ஒருவனுக்காக காத்திருக்காதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
* கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது.
* பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்…
* இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.