உலகத்தை மாற்ற நினைப்பவர்கள்
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான்
- ஜேம்ஸ் ஆலன்
ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்
- பிராங்கிளின்
தகவல்கள் தெளிவாக இருந்தால் முடிவுகள் தானாகவே வந்து குதிக்கும்
- பீட்டர் டிரக்கர்
முதலில் நாம் நமது பழக்கங்களை உருவாக்குகிறோம். பின்னர் நமது பழக்கங்கள் நம்மை உருவாக்குகின்றன
- ஜன் டிரைடன்
வரலாற்றை கற்றுணர்வது நல்லது. அது போன்ற வரலாற்றை படைப்பது அதனினும் மேலானது
- ஜவஹர்லால் நேரு
ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து பிரிப்பதற்காக மதங்கள் ஏற்படவில்லை. மனிதர்களை சேர்த்து வைப்பதுதான் மதங்களின் நோக்கம்
- காந்தியடிகள்
பெரிய கனவுகளைக் காணுங்கள், மனிதர்களின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கிற ஆற்றல் பெரிய கனவுகளுக்கு மட்டுமே உண்டு
- மார்கஸ் அரேலியஸ்
நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள்
- பிட்டின்
மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை
- லாவோட் ஸே
எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்
- எமர்சன்
எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்
- ஜான் ரஸ்கின்
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
- லியோ டால்ஸ்டாய்
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- அரிஸ்டாட்டில்
தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்
- எலியனார் ரூஸ்வெல்ட்
வாழ்க்கையை வெறுமனே வாழாதீர்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை வடிவமைத்து வாழுங்கள்.
- ஜப்ஃரான்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.