
உள்ளத்தில் உண்மையுடையவர்கள் ஒரு போதும் தோல்வி அடையமாட்டார்கள்.
- ஷிண்டே

ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; அது நாம் செய்யும் நற்செயலே.
- மேட்டர்லிங்க்

உண்மையாக நடந்துவரும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
- வாரியார்

நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
- ப்யூலர்

நம்பிகையுடன் இருக்கும்போது எந்தக் காரியமும் கடினமாகத் தெரிவதில்லை.
- ஜோன்ரேட்

உற்சாகமும் முயற்சியும் உள்ளவனுக்கு எங்கும் வேலை கிடைக்கும்.
- இங்கர்சால்

உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழி காட்டியாக இரு.
- இங்கர்சால்

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
- அரிஸ்டாட்டில்

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
- சாணக்கியர்

நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும் தூய்மையும் ஆற்றலும் உள்ளன.
- விவேகானந்தர்

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை; அவை உருவாக்கப்படுகின்றன.
- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்

ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஆற்றலும் மதிப்புள்ள முதலீடுகள்.
- லிட்டீன்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.