
நட்பு நம் இன்பத்தைப் பெருக்கித் துன்பத்தைக் குறைக்கிறது.
- எடிசன்

கோபம் முட்டாள்தனத்தில் துவங்கி வருத்தத்தில் முடிகிறது.
- பிதாகரஸ்

தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக் கண்டுபிடிப்பது தவறு.
- ரூஸோ

விலை கொடுக்காமல் பெற இயலாத பொருள் அனுபவம்.
- பியேர்

முன்னேற்றம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.
- உட்வெல்

ஆசைகளைத் திருப்திசெய்வதில் அமைதி இல்லை; மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.
- ஹிபர்

எவன் பூரணமாக அகத்தூய்மை உள்ளவனோ அவனே உண்மையான பக்திமானாகிறான். மனத்தைப் பெருமளவுக்குத் தூய்மைப் படுத்துவதுதான் பக்தி ஏற்பட சிறந்த குணம்.
- சுவாமி விவேகானந்தர்

பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாகத் தங்கிவிடாமல் பார்த்துக்கொள்.
- எமர்சன்

எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம் செவிடனாக இருங்கள்.
- புல்லர்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.