வாழ்க்கையின் அடிப்படை எது?

கட்டுப்பாடான முயற்சியினாலும், கடுமையான உழைப்பினாலும் மனிதன் உண்மையை எய்த முடியும்.
- டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.

அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.
- கிளார்க்.

‘எனது’ என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே தோன்றாது.
- வாரியார்.

நூலகம் ஒரு தனிஉலகம். அதன் உள்ளே சென்றுவந்தால் அறிஞனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம்.
– அபீப் முகமது.

நம்பிக்கைதான் ஏழையை வாழ வைக்கும்.
– சாணக்கியர்.

நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும்.
– காந்தியடிகள்.

அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.
- மகாவீரர்.

சுதந்திரமாக இரு. எவரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்காதே.
- சுவாமி விவேகானந்தர்.

மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்.
– குருநானக்.

அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை!
– வள்ளலார்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.