யாருக்கு முதல் பெண் குழந்தை....?
அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
- போர்ச்சுக்கல்
ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும்.
- துருக்கி
இந்த உலகில் வாழவேண்டுமா எச்சரிக்கையுடன் இருங்கள்.
- கிரீஸ்
ஈக்கள், பூனைகள், காதலிகள் இந்த மூன்று உயிரினங்களும் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிக்கின்றன.
- பிரான்ஸ்
உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.
- ஆப்பிரிக்கா
ஊர்வலங்களைப் போல சாபங்களும் எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.
- இத்தாலி
எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும்.
- ஸ்பெயின்
ஏழை உ ண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
- கிரீஸ்
ஐயத்தைக் குறை - நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை - உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை - மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை - செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை - அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.
- ஸ்வீடன்
ஒருவன் பதவியில் இல்லாத போது கண்டிக்கிற அந்தக் குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான்.
- சீனா
ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
- ஹங்கேரி
ஔவை அதியமானுக்குக் கொடுத்த நெல்லிக்கனியிலே ஆயிரம் இருக்கு.
- இந்தியா (தமிழ்நாடு)
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.