* நல்ல பண்புகளைப் பெறுவதிலும் பிறருக்குப் புகட்டுவதிலும் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை பெருக வேண்டும்.
* உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.
* நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுக்கே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
* மனிதர்களிடம் வீரமில்லாத ஒழுக்கமோ, ஒழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ, முரடனாகவோ ஆகிவிடுவான்.
* சோர்வும், கவலையும்தான் வெற்றிக்குத் தடைபோடும் கற்கள்.
* மனிதனின் அறிவு உறங்கிவிட்டால் அவனது மனதில் கீழான ஆசைகள் தோன்றி வாழ்க்கையைச் சீர்குலைத்து விடும். அனைத்துத் தீமைகளும் போதிய நல்லறிவு இல்லாததால்தான் ஏற்படுகின்றன.
* அளவுக்கு மீறிய செல்வமோ, அளவுக்கு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் செய்து விடுகிறது.
* கற்காமல் இருப்பதை விடப் பிறக்காமல் இருப்பதே மேல்.
* அநீதி இழைப்பவன் அநீதிக்கு ஆளானவர்களை விட அதிகமாகத் துயரமடைவான்.
* சிறந்த முறையில் முயற்சி செய்தால் அறிவைப் பெறமுடியும்.
* எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது.
* அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ, தோழமையை வளர்க்கிறது.
* செல்வத்தைக் குவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற விருப்பமும் கண்மூடித்தனமான பேராசையும், சமுதாயத் தீங்குகளாகும். எனவே, அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.