பிரார்த்தனைகளை விட உயர்ந்தது எது?
நான் விரும்பிய காரியங்களை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் வரை நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை..
-பிரடெரிக் டக்ளஸ்.
என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்..
- டுபக் ஷகூர்.
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்..
- யோகோ ஓனோ.
செயல்கள் விதியின் விதைகள், அவைதான் இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன..
- ஹாரி எஸ் ட்ரூமன்.
பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்..
- ஹெலன் கெல்லர்.
ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு அனைத்திற்கும் சமமான பங்கு உண்டு.
- அப்துஸ் சலாம்.
நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்..
- வால்டேர்.
அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிவிடும்.
- லெனின்.
முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
- ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்.
சிறந்த ஐடியாக்கள் வேடிக்கைகளாகவே சிந்தனையில் வரும். முடிந்தவரை வேடிக்கையாகவே சிந்தியுங்கள்.
.
- டேவிட் ஒகில்வி.
ஜனநாயகம் என்பது மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களுக்காக அடிப்பது.
- ஆஸ்கர் வைல்ட்.
படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.
- ஸ்காட் ஆடம்ஸ்.
பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.
-இங்கர்சால்.
யாருக்கும் அடிமையாய் இருக்காதீர்கள், உங்களுக்கு தேவை என்று நீங்கள் உணரும் எல்லைவரை மட்டும் கடைபிடியுங்கள், ஆனாலும் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே எஜமானனாய் இருங்கள்.
-ஓஷோ.
பிறக்கும்போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும்போது உன்னோடுதான் இருக்கும், அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு.
-ஹிட்லர்.
வாழ்வில் மூன்றிலொரு பங்கு தூக்கத்தில் கழிந்தாலும் மரணம் என்ற சொல் மனிதனை அழ வைக்கிறது.
- பைரன்.
நம்முடைய முக்கிய குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களை செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்.
-ஜவஹர்லால் நேரு.
உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை!
-சார்லி சாப்ளின்.
நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்.
-லாவோட்சு.
நீங்கள் உடலில் அணியும் உடையை விட மேலானது... உங்கள் முகத்தில் காணும் மலர்ச்சி...
-ரூஸ்வெல்ட்.
யார் அதிகமாக கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே அதிகமாக கற்றுக்கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
-பிரான்சிஸ் பேக்கன்.
பிறர்முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிகொடுப்பது மட்டும்தான்.
-சுவாமி விவேகானந்தர்.
தொழில்நட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
நீங்கள் உண்மையையே பேசும்போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை...
மார்க் டுவைன்.
நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால், உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீ வேலை செய்ய வேண்டி வராது.
- கன்பூஷியஸ்.
தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
- லெனின்.
பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்..
- புத்தர்.
நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத நல்லவராய் இருப்பது மிக ஆபத்தானது.
-பெர்னாட்ஷா.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.