வாங்குபவனுக்கு நூறு கண்கள்... விற்பவனுக்கு....?

சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது.
- இத்தாலி

சுயநலம் என்ற நெருப்பு முதலில் மற்றவர்களைப் புசிக்கிறது. பின்னர் தன்னையே புசிக்கிறது.
- ரஷ்யா

உள்ளே நுழையுமுன், வெளியே வருவதைப் பற்றிச் சிந்தனை செய்.
- அரேபியா

நீ நூறு வருடம் வாழ்பவனைப் போல் வேலை செய்; நாளை இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.
- பல்கேரியா

உன் எதிரி ஒரு எறும்பு போல் இருந்தாலும் கூட,அவனை ஒரு யானையாகக் கருது.
- டென்மார்க்

ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.
- யூகோஸ்லோவியா

நாயிடம் கடன் பட்டிருந்தால்,அதையும் அய்யா என்றுதான் அழைக்க வேண்டும்.
- ஆப்பிரிக்கா

மேலே இடிவிழுந்த பிறகு, இடி விழும் பலனைப் பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டியதில்லை.
- சீனா

மலட்டுப் பசுவைவிட, பால் கொடுக்கும் வெள்ளாடு மேலானது.
- எஸ்டோனியா

தேவையற்றதை வாங்காதே, தேவையானதை விற்காதே.
- அமெரிக்கா

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
- கொரியா

ஆண்டவன் ஆடையை அவிழ்க்கவில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.
- ஜெர்மனி

உழைப்பு தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.
- நைஜீரியா

எளிதில் நம்புகிறவன், எளிதில் ஏமாற்றப்படுவான்.
- செக்கோஸ்லோவாக்கியா

பேசுகின்றவனை விட, கேட்பவனுக்கு அதிக புத்தி வேண்டும்.
- துருக்கி

அகந்தையால் இல்லை என்று சொல்லாதே, அல்லது பலவீனத்தால்; சரி என்று சொல்லாதே.
- ஸ்பெயின்

ஒருவனுடைய பதில்களை விட, அவனுடைய கேள்விகளிலிருந்து அவனைத் தெரிந்து கொள்.
- பிரான்ஸ்

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.
- ஆப்கானிஸ்தான்

தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.
- போர்ச்சுக்கல்

வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.
- டச்சு
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.