படைப்பு எது? படைப்பாற்றல் எது?
நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்
- ஜலால் அத்-டின் முஹம்மத் ருமி
நான் விரும்பிய காரியங்களை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் வரை நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை.
- பிரடெரிக் டக்ளஸ்
என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்
- டுபக் ஷகூர்
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.
- யோகோ ஓனோ
ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு அனைத்திற்கும் சமமான பங்கு உண்டு
- அப்துஸ் சலாம்
செயல்கள் விதியின் விதைகள், அவைதான் இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.
- ஹாரி எஸ் ட்ரூமன்
பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.
- ஹெலன் கெல்லர்
90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!
- நந்திதா தாஸ்
முன்னோக்கிச் செல்லப் பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
- ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்
நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்.
- வால்டேர்
ஜனநாயகம் என்பது மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களுக்காக அடிப்பது.
- ஆஸ்கர் வைல்ட்
படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக் கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது
- ஸ்காட் ஆடம்ஸ்
ஜனநாயகம் என்பது மக்களின் குண்டாந் தடியால் மக்களால் மக்களுக்காக அடிப்பது.
- ஆஸ்கர் வைல்ட்
பரிசுகளை வெல்லும் எண்ணத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் யாரும் இறங்குவதில்லை. யாரும் அதுவரை அறியாத ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது ஏற்படும் அளவற்ற ஆர்வத்தினாலேயே அதை செய்கின்றனர்.
- ஸ்டீபன் ஹாக்கிங்
நம் திறன்களைத் திறப்பதற்கான சாவி தொடர் முயற்சிதானே தவிர, வலிமையோ அறிவு கூர்மையோ அல்ல
- வின்ஸ்டன் சர்ச்சில்
எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.
- உ. சகாயம்
விரக்தி, கசப்பு மற்றும் ஒரு விதமான உதவாத மனநிலையை வைத்துக்கொண்டு உன்னால் எதையும் செய்ய முடியாது
- லேக் வலேஸா
ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டும் அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப்பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்.
- எலன் மஸ்க்
மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்
- சார்லஸ் கரால்ட்
புத்தகங்களை வாசிக்காத ஒருவனுக்கும் வாசிக்க முடியாத ஒருவனுக்கும் எந்த நன்மை செய்யக்கூடிய வித்தியாசமும் இல்லை
- மார்க் ட்வைன்
நமது வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன், நாம் அவற்றை கடந்து செல்கிறோம்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை
- ஆபிரகாம் லிங்கன்
நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க்கும்போது “நீ ஒரு முட்டாள்” என்ற வார்த்தையை அதிகம் எதிர்கொள்ள தயாராகுங்கள்.
- லேரி எல்லிசன்
செய்த கடின உழைப்பு சோர்வடையச் செய்த பிறகும், கடின உழைப்பை தொடர்வதன் பெயர்தான் விடாமுயற்சி
- நியூட் ஜிங்க்ரிச்
சோர்வடைவதற்கு முன்பே ஓய்வெடுப்பதற்கு பெயர் சோம்பறித்தனம் இல்லாமல் வேறென்ன?
- ஜூல்ஸ் ரெனால்ட்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.