பயனற்ற காரியங்கள் நான்கு
பழமொழிகளைக் கவனிக்காதவன் தவறுகளைத் தவிர்க்க மாட்டான்
- துருக்கி
தன் அறிவீனத்தை உணர்ந்தவன் அறிவுப் பாதையில் செல்கிறான்.
- இத்தாலி
அறிஞனைக் கேட்காதே; அனுபவசாலியைக் கேள்.
- இந்தியா
நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல்; நீ யார் என்பதை நான் உன்னிடம் சொல்கிறேன்.
- அமெரிக்கா
உன்னுடைய கவலையை உன் முழங்கால்களுக்கு மேல் போக விடாதே.
- ஸ்வீடன்
மற்றவர்களைக் குறை கூறுவது போல் நீ உன்னைக் குறை கூறிக் கொள், உன்னை நீ மன்னிப்பது போல் மற்றவர்களை மன்னித்துக் கொள்.
- சீனா
பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.
- அரேபியா
அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை.
- ஆப்பிரிக்கா
ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான பதிலடி நாம் மௌனமாக இருப்பதே.
- ஜெர்மனி
தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல்.
- ருமேனியா
உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.
- அமெரிக்கா
ஈரமான விறகிலிருந்து மட்டுமல்ல எல்லா விறகிலிருந்தும் புகை வரும்.
- கிரீஸ்
உங்களை நேசிப்பவகளைவிட, வெறுப்பவர்கள் இந்த உலகில் அதிகம் இருப்பதால், பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
- எஸ்டோனியா
புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை.
- இத்தாலி
பல பழங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால், கடைசியில் அழுகிய பழங்களைத்தான் வாங்க நேரிடும்.
- ஆப்பிரிக்கா
விக்கிரகங்கள் செய்பவன் அதை வணங்குவதில்லை.
- ரசியா
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.