ஏழு நாட்டுப் பழமொழிகள்
ரசியா
* பூண்டு ஏழு பிணிகளை தீர்க்கும்.
* திருடின விறகும் எரியும்.
* நோயாளிக்கு தேனும் கசக்கும்.
* பிறரை உள்ளன்புடன் நடத்துவது பெருந்தன்மையின் அடையாளம்.
* மனைவிக்கு கணவனே சட்டம்.
* பன்றி்க்கு உணவு நேரம் எது?
* இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.
ஸ்பெயின்
* பெண்கள் கிடைத்ததை விரு்ம்ப மாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்
* விருந்தினருக்கு முதுகுப் புறம்தான் அழகு.
* அதிகம் பேசுகின்ற இருவர் நெடுந்தூரம் சேர்ந்து போக முடியாது.
* கோழி ஊரெங்கும் கூவும், சேவல் குப்பை மேட்டில் இருந்துதான் கூவும்.
* எது நன்மை என்பது அதை இழக்கு்போதுதான் தெரியும்.
அமெரிக்கா
* உலகில் புத்திமதிதான் இலவசமாக கிடைக்கும் சரக்கு.
* வெகுமதியும் தண்டணையுமே உலகை ஆட்சி செய்கின்றன.
* நரியோடுசேர்ந்த சேவல் நன்மை அடையாது.
* பழைய புத்தகங்களுக்கு வேர் நீளம்.
* பெரிய சண்டைக்குப் பின்னால் பெரிய நட்பு இருக்கும்.
* சொந்த நாற்காலியில்தான் சுகமாக உட்காரமுடியும்.
கிரீஸ்
* பழிவாங்குதலைவிட மன்னித்தல் மேலானது.
* அதிர்ஷ்டம் உள்ளவன் சேவலும் முட்டையிடும்.
* நல்ல நடத்தையே சீரிய பண்பாக அமையும்.
ஆப்பிரிக்கா
* மென்மையான சொற்கள் செல்வத்தைக் கொண்டுவரும்.
* கம்புகள் கட்டோடு இருந்தால் அதை ஒடிக்க முடியாது.
* செல்வம் தேயும், கல்வி வளரும்.
* பிச்சைக்காரனின் கோபம் அவன் தலையில்தான் விடியும்.
* வீட்டுத் தலைவன் மீது எல்லோருடைய குப்பையும் கொட்டப்படும்.
எஸ்டோனியா
* நீ எதற்கு அஞ்சுகிறாயோ, அது உன்னை எட்டிப் பிடித்துவிடும்.
* தொழில் தெரிந்தவனிடம் வேலையே நடுங்கும்.
* காலியாய் உள்ள தலைகள் எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.
சீனா
* எப்போதும் கண்களைத் திறந்து கொண்டே இரு. வாயை அல்ல.
* அழகில்லா மனைவியும், அறிவில்லா வேலைக்காரியும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.
* ஒருவனை நண்பனாகக் கொள்வதில் நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் நட்புக் கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும்.
* சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன்.
* ஒரு குடும்பத்தைப் பாழாக்குவது திறமையற்ற பிள்ளைகள் அல்ல. கெட்டிக்கார பிள்ளைகளே!
* அமைதியாக எழுபவன் லாபத்துடன் தூங்குவான்.
* தாகம் ஏற்படுவதற்கு முன்பாகவே கிணற்றைத் தோண்ட வேண்டும்.
* மனிதர்கள் அன்பாக உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாக இருக்கும்.
* மிக முக்கியமான விஷயங்களுள் முதன்மையானது, நம்முடைய மன சாட்சியை நாம் ஏமாற்றாமல் இருப்பது தான்.
* மற்றவர்களின் வடு நமக்கு பாடமாக அமைய வேண்டும்.
* உன்னுடைய விரோதிக்கு நீ அடிக்கடி கோபத்தை மூட்டினால் அவனை விட அது உன்னையே அதிகம் அழிக்கும்.
* புன்சிரிப்பு செய்யவே இயலாதவன், புதிய கடையைத் திறக்க தகுதியற்றவன்.
* உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாள் சாப்பாடும் விருந்து தான்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.