இறைவன் எதில் தோற்றான்...?
ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் வருகிறான்.
- எமர்சன்
இறைவன் கொடுத்த பரிசு இந்த வாழ்வு, சரியாகப் பயன்படுத்துவது மனிதன் முயற்சி.
- வால்டேர்
இறைவன் நமக்கு கொடுத்த முகம் ஒன்று அதற்கு நாம் முகமூடி போட்டுகொள்கிறோம்.
- ஷேக்ஸ்பியர்
இறைவன் தந்திரமானவன். ஆனால் ஒரு போதும் ஏமாற்ற மாட்டான்.
- எய்ன்ஸ்டீன்
இறைவன் ஆசிர்வாதம் செய்வதற்கு முன் பல அல்லல் தருவான்.
- மகாத்மா
இறைவன் மனிதனைப் படைத்த பின் திருப்தியடைந்தான். ஆனால் ஏமாந்து விட்டான்.
- சாமுவேல் பட்லர்
இறைவன் தீயவரைத் தண்டிக்கிறான். நல்லவரைப் பாராட்டுகிறான் என்பதை நம்பமுடியவில்லை.
- எய்ன்ஸ்டீன்
இறைவன் மனிதனைப் படைத்த போது, தனது திறமையில் தோற்றுவிட்டான்.
- ஆஸ்கார் ஒயில்
இறைவன் நம்முடன் இருக்கும் போது எவர் நமக்கு எதிராக இருக்க முடியும்.
- பைபிள்
இந்த உலகத்தை, உலகில் உள்ள செல்வங்களை உருவாக்கி வைப்பதும் அவற்றை அழிப்பதும் இறைவனே.
- அய்யா வைகுண்டர்
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
- நபிகள் நாயகம்
நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.
- ஸ்ரீ அன்னை
இறைவன் நம்மை அன்பு என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பார்க்கிறார்!
- குருநானக்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.