* யுத்தத்திற்கு எந்நாளுமே தேவையில்லை ! யுத்தமே அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக்காவு கொள்ளும் யுத்தம் அநாகரிகத்தின் அதிசய உருவமாகும்.
* வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காதவனே ஆவான்.
* நல்லியல்புகள் பல கொண்ட மனிதத்தன்மைக்கு மாறானது யுத்தம். மனிதனை மனிதனாக வாழ விடாமல் மிருக இயல்புகளுக்கு ஆளாக்கும் யுத்தம் இன்றி வாழ்வதே அறிவுடைய செயலாகும்.
* மனிதன் தான் விரும்பாத ஒன்றில் பற்றில்லாமல் வாழ அவனுக்கு உரிமையுண்டு.
* உரிமைகள் அற்ற மனிதன் பொம்மையே. உரிமைகளுடன் வாழ்வதே எல்லையில்லாத இன்பத்தை தருவதாக அமையும்.
* ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.
* கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை பயிற்றுவிப்பது.
* மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி.
* இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாட்டில் ஒரு போதும் குடியுரிமை பெறக்கூடாது. அந்த நாட்டில் குடியுரிமை இருந்தால் அதைத்தூக்கி வீசிவிட வேண்டும்.
* ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி, என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.
* எப்படிப்பட்ட கொடிய தண்டனைகள் கிடைத்தாலும் உண்மையை மட்டுமே உரைக்கிற அற்புதமான பழக்கம் வரவேண்டும், அதுவே வாழ்க்கைக்கு அழகு.
* குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பை கொல்லும் கொலைகாரரே.
* கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை படைத்தது எப்படியென்ற இரகசியத்தை அறியவே வாழ்வு முழுவதும் போராடுவேன்.
* மதத்தின் பேராலும், இனத்தின் பேராலும் இரத்தம் சிந்தப்படுவதை வன்மையாக எதிர்க்கிறேன். மனித நேயமே என்மதம்.
* இராணுவெறி, மதவெறி, போர்வெறி, இனவெறி, தேசவெறி இவைகள் எதுவும் இல்லாத உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன்.
* பிறருடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து மாண்புடையோராக வாழ்வதே கல்வி கற்றோருக்கு அழகுடைய செயலாகும்.
* உலகத்தினதும், பிரபஞ்சத்தினதும் இயக்கங்கள் அனைத்தும் ஈர்ப்பு சக்தி மின்காந்த சக்தி இரண்டினதும் அடிப்படையே. பொருளும் சக்தியும் ஒன்றே பொருளை சக்தியாக்கலாம், அதுபோல சக்தியைப் பொருளாக்கலாம்.
* அடிப்படைக் கொள்கைகளில் நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் ஒப்பந்தங்களாலும் ஆயுத சேகரிப்பாலும் யாதொரு பயனும் கிடைக்காது.
* நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.
* வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி.
* உலக சமாதானம் என்பது முக்கியமானது, அது இல்லாவிட்டால் மனிதன் புவியில் நீடித்திருப்பது இயலாத காரியமாகும்.
* வறுமையாலும் அச்சத்தாலும் உந்தித்தள்ளப்படுகிறார்கள் போர் வீரர்கள். அவர்கள் வாழ்க்கை வியப்பிற்குரியதன்று, பாவம் அருவருப்பிற்குரியது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட போர் வெறிக்கு அவர்களும், அவர்களோடு எதிர்த்து போர் புரிவோரும் பலியிடப்பட்டிருக்கிறார்கள்.
* வறுமையில் ஒற்றுமை, இல்லாமையில் இனிமை, கடன் சுமையிலும் கடமை உணர்ச்சி என்றிருக்கும் குடும்பத்தை எவரும் அழிக்க முடியாது.
* கற்பனை கல்வியைவிட முக்கியமானது.
* இரண்டு விடயங்கள் எல்லையற்றவை, அவை மனிதனின் முட்டாள்தனமும் பிரபஞ்சம்மும், ஆனாலும் இரண்டாவதைப் பற்றி உறுதியாக தெரியவில்லை.
* அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே.
* நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.
* எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்பதே பொருள்.