முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை

மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சி போன்றது. அதைத் துரத்தினால் அகப்படுவதில்லை. ஆனால் உன் கவனத்தைப் பிற பொருள்களின் மேல் திருப்பும்போது அது அமைதியாக உன் தோளில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
– விக்டர் ஃபிராங்கின்

ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதைவிட பத்து நாடுகளைத் தெரிந்து கொள்வது எளிது.
– யூதப் பழமொழி

உத்தரவால் வாழ்கிறவன் பணக்காரன். உழைத்து வாழ்பவன் ஏழை.
– ரஷ்யப் பழமொழி

பிறையே! நீ குறையாய் இருப்பதால் குமைந்து போகாதே! உனக்குள்ளே ஒரு பூரணசந்திரன் புதைந்து கிடக்கின்றான்.
- இக்பால்

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடை பெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.
– பட்லர்

நல்ல மனநிலையில் செய்கின்ற எதுவும் நூறு சதவிகிதம் நேர்த்தியுடன் இருக்கும்.
– விவேகானந்தர்

வாழ்க்கை என்பது ஒரு சுமை, அதைத் தாங்கிக் கொள்; அது ஒரு முள் கிரீடம் அதை அணிந்து கொள்.
- அப்ராம் ரியான்

நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.
- ஷேக்ஸ்பியர்

முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை, அறிவாளியின் ஒரு நாள் வாழ்க்கைக்கு சமம்.
- கோல்டன்

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.
- கீட்ஸ்

வாழ்க்கை என்பது போர்க்களம்; இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை; ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
- காண்டேகர்

எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.
- லெனின்

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
- ஜேம்ஸ் டக்ஸில்

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.
- வில்லியம் பிளேக்

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.
- காண்டேகர்

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
- பாரதியார்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
– சர் பிலிப்சிட்னி

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

மனிதன் வெறுமனே மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மட்டும் படைக்கப்படவில்லை. மனிதகுல நன்மைக்கான மிக உயர்ந்த உணர்வெழுச்சிகளை அடைந்து, அதன் மூலம் சாதனைகள் நிகழ்த்தவே படைக்கப்பட்டு உள்ளான்.
– ரெனான்

இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே.
– ஆபிரகாம் லிங்கன்

கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது.
- லியனார்டோ டாவின்சி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
– அம்பேத்கர்
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.