
நண்பனோடு அளவோடு நட்புகொள், நாளை அவனே உனக்கு விரோதியாகலாம். எதிரியிடம் அளவாகப் பகைமைகொள், ஏனெனில் நாளை அவன் உனக்கு நண்பனாகக்கூடும்.

ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்துக்கு ஓர் அழகை – ஒளியைக் கொடுக்கிறது.
– ரஸ்கின்

வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன. அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து நிறைய நன்மைகளும் ஏற்படுகின்றன.
– மகாவீரர்

நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும். கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டிருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும்.
– புத்தர்

அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடா முயற்சியினால்தான் சாதிக்கப்படுகின்றன.
– சாமுவல் ஜான்சன்

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்.
- விவேகானந்தர்

உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.
- ஐன்ஸ்டீன்

உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.
- கிரேஸியன்

யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.
- மாண்டேயின்

எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.
- அரவிந்தர்

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
- அரிஸ்டாட்டில்

சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும் நம்மைக் காப்பது உழைப்பு.
- வால்டேர்

எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம் செவிடனாக இருங்கள்.
- புல்லர்

மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை. மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும். ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.
- ஜான் ஹெர்பர்ட்

தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.
- மாத்யூஸ்
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.