ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது.
- காவட்
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது .
- ஜேம்ஸ் ஆலம்
ஆர்வம் இல்லாத இடத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை.
- ராக்மென்
நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- அடால்ப் ஹிட்லர்
பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைப்படுத்த வேண்டும்.
- பெர்நார்க்
அவசரமாக தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
- ஜெபர்சன்
பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள்.
- லிண்டல்
மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையை பாதுகாக்கும்.
- வள்ளலார்
துணிவோடு செயல்படாத காரணத்தால் உலகில் பல திறமைகள் சிதறிப் போகின்றன.
- சிட்னி ஸ்மித்
ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்.
- வால்டர்
மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை.
- சாணக்கியன்
நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள், அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான்.
- மார்ஷல்
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.