முன்னேறத் தேவையான மூன்று

சமூதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.
- கார்ல் மார்க்ஸ்

உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்; கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
- பிளமிங்

பத்து விரல்களும் பதறாது உழைத்தால், அஞ்சு விரலால் அஞ்சாது தின்னலாம்.
- டாலிராண்ட்

அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம்.
- லாங்பெல்லோ

கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.
- டர்னர்

ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.
- எமர்சன்

மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.
- விவேகானந்தர்

உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.
- ராபர்ட் சப்ரிசா

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; உலகத்தை இயக்குவதும் அதுவே.
- வெப்ஸ்டர்

உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது.
- ஜேம்ஸ் ஆலன்

கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி

சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய மூன்று தீமைகளை உழைப்பு களைகிறது.
- வால்டேர்

அடிமையைப்போல உழைப்பவன், அரசனைப்போல உண்பான்.
- கதே

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.
- லாங்பெல்லோ

உழைப்பு வறுமையை மட்டுமல்லாமல், தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.
- ஓ. வாய்னே ரோலின்ஸ்

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும்.
- தாமஸ் ஆல்வா எடிசன்

உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.
– ஹென்றி போர்டு

உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை.
– ஹாலி
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.