* பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதை விட தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
* நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம்.
* உண்மையாக நாணயமாக நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.
* வாசக சாலைகளில் நல்ல அறிவை வளர்க்கும் அறிவுக்கு உணவாகும் எல்லா கொள்கைகள் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும்.
* ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக அதில் மேம்பட்டவனாக உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும்.
* ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
* ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற்கல்வி மிக அவசியமானது.
* காலத்தை எதிர்பார்ப்பது என்பதே சோம்பேறித்தனத்தைத்தான் குறிக்கும்.
* கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது.
* தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது.
* பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்ற மடைந்து விடும்.
* மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வது தான்.
* நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
* தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக் கேடும் ஒழுக்க கேடும் வளர்ந்துகொண்டே தான் போகும்.
* பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும்.