நல்ல காரியங்களைச் செய்யப் பயப்படலாமா?

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.
- மான்ஸ்பீல்டு.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
- அன்னை தெரசா.

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
- ஜேம்ஸ் ஆலன்.

வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும்.
- பிராங்க்ளின்.

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
- பெர்னார்ட்ஷா.

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
- சாணக்கியர்.

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
- ஜான்மில்டன்.

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.
- வோல்டன்.

அவசரமாகத் தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
- ஜெபர்சன்.

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
- ஷேக்ஸ்பியர்.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியஸ்.

குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்.

மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே.

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
- ஜெனீக்கா.

அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம். ஒழுக்கத்தை நம்பியிருங்கள்.
- பப்ளியஸ்ஸிரஸ்.

ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.

உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.

வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
- அன்னிபெசண்ட்.

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
- புல்லர்.

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.

வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும்.
-அவ்பரி.

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.

அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது
- பீட்டர்.

முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.

விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்.

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
- கன்பூசியஸ்.

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்.

அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
- சுவாமி விவேகானந்தர்.

உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்.
- ஸ்ரீ அன்னை.

தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
- போவீ.

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.
- அரிஸ்டாட்டில்.

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்.
தொகுப்பு:- மு.சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.