1. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
2. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
3. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கப் பயிற்சியும் ஆகும்.
4. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
5. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
6. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
7. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
8. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
9. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
10. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
11. ஒரு வினாடி நேரச் சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
12. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
13. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பதுதான்.
14. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
15. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
16. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்.
17. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
18. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
19. செல்வ வளம் என்பது அதிகமாகச் செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.
20. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.