* அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் எந்த தொடர்பும் கிடையாது.
* எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே தான் வாழ்வு இருக்கிறது.
* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.
* விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள். தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
* மயக்கம் வரும்போது அறிவு பயன்படாது. அந்த இடத்தில் நம்பிக்கைதான் கைகொடுக்கும்.
* கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல; தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே உண்மையான குருடன்.
* எல்லா கலைகளையும் விட வாழ்வு தான் பெரிது.
* பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.
* மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
* கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
* மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
* உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
* சில அறங்களில் ஆண்களை விடப் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
* செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
* பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாக இருக்க மறந்துவிடுங்கள்.
* பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.
* கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
* தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விடப் பெரிய அவமானம் எதுவுமில்லை.
* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
* எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
* மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
* பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.
* இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது! இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்!
* உடலின் வீரத்தை விட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.
* தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையேத் தருகிறது.
* நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகளல்ல... நமது வாழ்க்கையே...
* சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அது போலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.
* நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
* தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.
* பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.
* கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
* ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
* உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
* வீரம் உடலின் ஆற்றல் அல்ல. உள்ளத்தின் பண்பு.
* எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.
* வலிமையும், வீரமும் மிக்கவர்களின் ஆயுதம் அகிம்சை.
* அகிம்சையிலும், சத்தியத்திலும் தோல்வி என்பதே கிடையாது.
* தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.
* சுயக்கட்டுப்பாடுடையவனே சுதந்திரமான மனிதன்.
* நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடையமாட்டான்.
* எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம் தான். அந்த அறத்திற்கே அடிப்படை உண்மை தான்.
* நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமில்லை; நீ 'செய்கிறாய்' என்பது தான் முக்கியம்.
* பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அது போல முதலில் நீ மாறு.
* பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்.