பேசப்படும் சொல்லை விட....

தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.
- எமர்சன்

சொர்க்கமே இடிந்து அழிந்து போனால் கூட நீதி, நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும்.
- ஆங்கிலப் பழமொழி

வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக் காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.
- வால்டேர்

கடவுள் எங்கும் இருக்க முடியாது என்பதற்காகவேத் தாயைப் படைத்தார்.
– யூத பழமொழி

ஒரேயொரு நற்செயலை மட்டும் தவறாது ஆற்றினால் போதும். சொர்க்கம் உங்களைத் தேடி வரும். அந்தச் செயல்தான் உண்மை பேசுதல்.
- நபிகள் நாயகம் (ஸல்)

சொல்லாலும் செயலாலும் உண்மையாக வாழ்ந்தாலே, இறைவனைக் கண்டுவிட்டதாகப் பொருள். உண்மைதான் கடவுள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களைச் சுதந்திர மனிதனாக ஆக்கிவிடும். உண்மையைப் பேசுங்கள். உண்மையாகச் செயல்படுங்கள். உறுதியாக நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள்.
- என்.வி.பீல்

நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.
- புட்ஸர்

உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயேக் குடிகொண்டு இருக்கின்றன.
- சுவாமி விவேகானந்தர்

இயற்கை, காலம், பொறுமை இவை மூன்றும் சிறந்த மருத்துவர்கள்.
- ஜார்ஜ் போஹன்

நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது மற்றவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்.
- எமர்சன்

தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.
- சாணக்கியன்

அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே நம்மை வந்து சேரும்.
- மகாவீரர்

பேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.
- ஹிட்லர்

நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது; அது திரும்பி வராது.
- ஜேஷி

விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்.
- ரூஸ்வெல்ட்

உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
- எடிசன்

பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகாது.
- ஜேம்ஸ் ஆலன்

உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
- மில்டன்

வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
- விவேகானந்தர்

அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
- ரஸ்கின்

அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
- சாணக்கியன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.