* கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டறிவீர், தட்டுங்கள் திறக்கப்படும்.
* ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தை காட்டு.
* நீதியின் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.
* சிறுவிஷயத்தில் தவறாக நடப்பவர்கள் பெரிய விஷயத்திலும் தவறாக நடப்பர்.
* அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிட வல்லது.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.
* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.
* தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன் மதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி; தீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.
* நிறை கண்டால் போற்றுங்கள், குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள்.
* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
* முட்டாளின் கோபம் விரைவில் வெளிப்பட்டுவிடும். கோபத்தை அடக்குபவனே மனிதன்.
* அன்பான வார்த்தை பேசுங்கள் நிறைய பலன் கிடைக்கும். கோபப்படுவதினால் பயன் ஒன்றும் விளையப்போவதில்லை.
* நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையேச் செய்வர்.
* மரங்களின் மூலவேர் அருகேக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலேப் போடப்படும்.
* நாம் இந்த உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகிலிருந்து ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை.
* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப் போய் விடுவார்கள்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச்செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதேச் செய்.
* கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
* செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் வேர்.
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் கடவுள் அருளால் ஆறுதலை அடைவர்.
* வாழ்க்கை என்பது சற்றுநேரம் தோன்றி மறைந்து போகும் புகை.
* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காகச் சாவதுமில்லை.
* மனிதனின் வாழ்நாட்களோ புற்களுக்கு ஒப்பானவை. வயலின் பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன்மீது வீசிப்போனதும், பூவும் இல்லாமல் போய் விடுகிறது. அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுப்பேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரையொருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.
* நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக.
* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.
* கவலைப்படுவதால் யாராவது ஒரு முழமேனும் உயர்ந்து விடமுடியமா?
* ஒருவரும் துரத்தாவிடினும் தீயவர் பயந்து ஓடுவர். நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர்.
* தீமையை நன்மையால் வெற்றி கொள்.
* கடவுளுடைய வேதம், நீதிமானின் இருதயத்திற்குள் இருக்கிறது. அவனுடைய நடைகளில் எதுவும் தவறுவதில்லை.
* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது.