
வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை அடைய இன்றியமையாத முதற்படி, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.
- பென் ஸ்டீன்

ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விடயங்களை ஒருபோதும் அடைய முடியாது.
- நிக்கோலோ மச்சியாவெல்லி

ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு வலிமையின் பற்றாக்குறை அல்ல, அறிவின் பற்றக்குறை அல்ல, மாறாக விருப்பத்தின் பற்றாக்குறையாகும்.
- வின்ஸ் லோம்பார்டி

வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது "விடாமுயற்சி" என்று நான் நம்புகிறேன்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்

போரே இல்லாமல் கிடைக்கும் வெற்றிதான் மிகச்சிறந்த வெற்றி.
- சுன் சூ

கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன்தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான்.
- அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்.
- பாபி அன்சர்

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள், நீங்கள் செய்வதை நேசித்து செய்யுங்கள், நீங்கள் செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
- வில் ரோஜர்ஸ்

வெற்றிகரமான மனிதர்கள் வெறுமனே வெற்றிகரமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.
- பிரையன் ட்ரேசி

வெற்றி என்பது நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும்.
- ராபர்ட் கோலியர்

திறமை ஒரு பரிசு, ஆனால் உங்கள் கடின உழைப்பால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
- ஜீன் பெலிவோ

உங்கள் வெற்றி பலரை உங்களை வெறுக்க வைக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள பொறாமையைப் பார்க்காமல், வெற்றியை அனுபவிப்பதே சிறந்ததாகும்.
- மர்லின் மன்றோ

வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி? என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை.
- புரூஸ் லீ

வெற்றியாளர்கள் தோற்பதற்குப் பயப்படுவதில்லை. ஆனால் தோல்வியாளர்கள் பயப்படுகிறார்கள். தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும். தோல்வியைப் புறக்கனிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கனிக்கிறார்கள்.
- ராபர்ட் கியோசாகி

வெற்றி என்பது மனதின் நிலை. நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாரளாக நினைக்கத் தொடங்குங்கள்.
- ஜாய்ஸ் பிரதர்ஸ்

வெற்றிக்கான இரகசியம் என்று எதுவும் இல்லை, இது முன்னேற்பாடு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல் இவைக்கான பிரதிபலனாகும்.
- கொலின் பவல்

தடைகள் குறுக்கிடும் போது, இலக்கை அடைவதற்கான் உங்கள் திசையை மாற்றுங்கள், இலக்கை அடைய வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை மாற்றாதீர்கள்.
- ஜிக் ஜிக்லர்

இந்தக் கணத்தில் சிறந்த ஒன்றைச் செய்வது, அடுத்த கணத்தில் உங்களைச் சிறந்த இடத்தில் வைக்கிறது.
- ஓப்ரா வின்ஃப்ரே

மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன.
- மோலியர்

உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிந்தால், உங்களால் அதை அடைய முடியும். உங்களால் அதைக் கனவு காண முடிந்தால், உங்களால் அதுவாகவே ஆக முடியும்.
- வில்லியம் ஆர்தர் வார்டு

செயலே அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்.
- பப்லோ பிகாசோ

தன்னம்பிக்கையும் கடின உழைப்பும், உங்களுக்கு எப்போதும் வெற்றியைத் தரும்.
- விராட் கோலி
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.