* இந்த உலகை விலையாகக் கொடுத்து, மறு உலகை வாங்கு: இரண்டும் உனக்கு உரிமையாகும்.
* மரத்தடியில் ஆளில்லாத போதுதான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான்.
* ஒளி ஒளியிலிருந்து வருகிறது; இரண்டு ஒளிகளும் ஆண்டவனிடமிருந்து வருகின்றன.
* அதிர்ஷ்டக்காரனை நைல் நதியில் தள்ளினாலும், அவன் வாயில் ஒரு மீனோடு வெளியே வந்து விடுவான்.
* சோம்பேறி ஜோசியனாகிறான்.
* இலைகள் அதிகமாயிருந்தால், கனிகள் குறைவாயிருக்கும்.
* மலை இடம் பெயர்ந்துவிட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனல் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.
* மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்.
* வாழ்க்கை. இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம்.
* சுவர்க்கத்திற்குச் செல்வோன் பயிற்சி நிலையமே வாழ்க்கை.
* ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடு களால் மட்டும் சிரிப்பார்கள்.
* மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும்_பெண் இனமே மேலானது.
* காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து வைக்க முடியாது.
* ஒரு பெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக் கட்டையையாவது மணந்து கொள்ளல் நலம்.
* வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள் தேவை: ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக்கொள்ளவும்.
* இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது: வெளியேயிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளேயிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.
* என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது. அவனுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.
* ஆகாத காலத்தில் கிழவர்களுக்கெல்லாம் பற்கள் விழாமலிருக்கும்.
* ஈச்ச மரத்திற்கு வேர் தண்ணிரிலும், உச்சி வெய்யிலிலும் இருக்க வேண்டும்.
* ஒட்டகத்தின் மேலிருப்பவன் திட்டங்கள் போடுகிறான்; ஒட்டகத்திற்கும் திட்டங்கள் உண்டு.
* செத்தது நாய்தான். ஆனல் சவ ஊர்வலம் மிக நீளம்.
* நீ மிகவும் மென்மையாயிருந்தால், உன்னைக் கசக்கிப் பிழிந்து விடுவார்கள்; நீ விறைப்பாயிருந்தால், உன்ளைத் தகர்த்து விடுவார்கள்.
* உன் சொத்து உன்னிடமுள்ள அடைக்கலப் பொருள் என்று கருது.
* இன்பம் என்பது அன்பின் மகன், ஆனால் தந்தையாகிய அன்பையே கொல்லும் இன்பம் இயற்கையான மகனல்ல.
* வெங்காயம் கிடைத்ததற்கு ஒருவன் துள்ளிக் குதித்தால், வெல்லம் கிடைத்தால் என்ன செய்வானோ?