* ஆண்டவனுடைய பேரறிவும், மனிதனுடைய தவறும் சேர்ந்து உலகை ஆள்கின்றன.
* கடவுள் துணிகளாகக் கொடுப்பதில்லை, நூற்பதற்குப் பஞ்சாகக் கொடுக்கிறார்.
* ஒரே கடவுள், ஒரே சட்டை, ஒரே மனைவி.
* ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கின்றது.
* படுத்துகொண்டேப் பிரார்த்தனை செய்தால், கர்த்தர் உறங்கிக் கொண்டேக் கேட்பார்.
* சுவர்க்கத்தை அடைவதைவிட, நரகத்தை அடைவதில் சிரமம் அதிகம்.
* வக்கீல்கள் பணப்பையைக் காலி செய்கிறார்கள்; வைத்தியர்கள் வயிற்றைக் காலி செய்கிறார்கள்; பாதிரிமார்கள் ஆன்மாவைக் காலி செய்கிறார்கள்.
* விதியின் தீர்ப்பையே மனிதன் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றுகிறான்.
* அதிருஷ்டமுள்ள மனிதன் வாயைத் திறந்துகொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் போதும்.
* அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.
* அரண்மனையிலிருந்து பால் கிடைத்தால், அதிலே ஒரு சுண்டெலி மிதக்கும்!
* ஓநாயுள்ள இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை.
* உலகம் எப்படியிருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள்; எப்படி இருக்கவேண்டும் என்று பாராதீர்கள்.
* இயற்கையின் விளக்கத்தைத் தொடர்ந்து செல்பவன் ஒரு காலும் வழி தவறான்.
* ஆப்பிள் கனி மரத்திலிருந்து தொலைவில் போய் விழுவதில்லை.
* மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்.
* மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான்.
* தனியாயிருக்கும் பிரமசாரி மயில்; காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம்; திருமணமானவன் கழுதை.
* துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
* ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும்; ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள்.
* கண்ணாடிக்குள்ளிருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
* காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.
* காதல் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
* அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவுநேரங்களில் இன்பமாயும், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான்.
* இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.
* பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம்.
* குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொல்லைகளை அறியான்; குழந்தைகளில்லாமல் இறப்பவன் மகிழ்ச்சியை அறியான்.
* அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது.
* இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள்.
* இளையோர் அறிய மாட்டார், முதியோர் மறந்துவிடுவர்.
* மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும்.
* நோய் குணமாகாது என்று தெரிந்தால் இருக்கிற மருந்தை ஒருவன் வீணாக்கமாட்டான்.
* மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிறான், மற்றவர்கள் சிரிக்கிறார்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக்கிறான், மற்றவர்கள் அழுகிறார்கள்.
* விளக்கை ஏற்றுவதைவிட அணைப்பது எளிது.
* காலிப்பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.