புரியாததைப் புகழ்ந்து பேசலாமா?

எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது.
- புத்தர்

தன்னைத்தானே அறிவதற்குச் சிறந்த வழி தியானம் செய்வது அல்ல; செயல்தான். உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்; உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.
- கதே

துணிவுமிக்க மனிதனே தன் தொழிலில் ஒவ்வொரு முறையும் புதுமை படைத்து வெற்றி பெறுகின்றான்.
- டேல் டவுட்டன்

நம்முடைய கனவுகளை லட்சியங்களை அடைய, இடையிலுள்ள தடைக் கற்களை உடைக்க வேண்டும்.
- அம்பேத்கார்

நீங்கள் இருக்கும்போது உங்களைக் கண்டு அஞ்சுபவன் நீங்கள் இல்லாதபோது உங்களை வெறுப்பான்.
- புல்லர்

உரையாடல் என்பது அறிவு பூர்வமான பரிவர்த்தனை; தர்க்கம் செய்வது அறியாமையின் பரிவர்த்தனை.
- பில் கோல்ட்

எல்லோரும் தங்களை வாழ்த்தவேண்டும் என்று விரும்புவதில்லை; எதிரிகளைச் சபித்தாலே போதும் என்று விரும்புகிறார்கள்.
- ஹரால்ட் நிக்கல்சன்

தினசரி கடமைகளைத் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்து வந்தால் வெற்றியும் தைரியமும் தொடர்ந்து கிட்டும்.
- மால்ட்ரிக்

அவலட்சணமான பெண் என்று ஒருத்தியும் கிடையாது. அழகாக எப்படி தோற்றமளிப்பது என்று தெரியாத பெண்கள்தான் உண்டு.
- ஜெரியர்

நடந்து முடிந்த உங்கள் திருமணத்தை அளவுக்கு அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டு இருக்காதீர்கள். செடியை இருபது நிமிடத்துக்கு ஒரு தரம் வேர் பிடித்து விட்டதா என்று கிளறிப் பார்ப்பது போன்றது அது.
- த பில் ஹாண்ட்புக்

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்தச் செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது.
- ஹென்றி போர்ட்

தாழ்ந்த லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி பெறுவதே மேல்.
- பிரவுனிங்

புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு; இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.
- லியனார்டோ டாவின்சி

கடமையை செய்பவனுக்குக் கடமை இருந்து கொண்டே இருக்கும்; கவலைப்படுகிறவனுக்குக் கவலை இருந்து கொண்டே இருக்கும்.
- கண்ணதாசன்

இந்த உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்து காட்டும் செயலைப் பார்த்துக்கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடக்கிறது என்றே அறியாமல் இருப்பவர்கள் மிகப் பலர்.
- பட்லர்

லட்சியம் என்பது நட்சத்திரம். அதை கைக்குள் அடக்க முயன்றால் தோல்வி நிச்சயம்; அதை வழியாகப் பின் தொடர்ந்தால் சேருமிடம் நிர்ணயம்.
- கார்ல்ரூஸ்

பெண்களிலே இரு பிரிவினரே உண்டு; அழானவர்கள் ஒன்று; அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றொன்று.
- பெர்னாட்ஷா

நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமானால் அடிக்கடி திரும்பிப் பாருங்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை மறந்து விடாமல் இருக்க.
- கும்மின்ஸ்

கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட ; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட.
- த்ரையன் எட்வார்ட்ஸ்

இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சி உலகத்துக்குத் தான் தான் வெளிச்சம் கொடுப்பதாக எண்ணிக்கொள்கிறது.
- ஸ்ரீராமகிருஷ்ணர்

சாதுர்யமான ஆண் பிள்ளையை ஒரு முட்டாள் பெண்ணால் சமாளிக்க முடியும். ஒரு முட்டாளைச் சமாளிக்க மிகச் சாதுர்யமான பெண் தேவை.
- சாமெர்செட்மகம்

அதிக அறிவு இல்லாததால் யாரும் அதிகம் நஷ்டம் அடைந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால், பலரது கஷ்டங்களுக்கு மிக முக்கியமான காரணம் அவர்களது கவனக்குறைவுதான். எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
- பெஞ்சமின் பிராங்க்ளின்

கடந்த காலம் அறிவு பெற; நிகழ் காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு.
- ஸ்காட்

தொலைவில் தெரிவதைப் பற்றிச் சிந்திக்காதவனுக்கு, துன்பம் அருகில் காத்திருக்கிறது என்பது தெரியாமலேப் போகிறது.
- கன்பூசியஸ்

ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்.
- சாம் போர்ட்

பெண்கள் அநியாயத்தைக் கூடத் தாங்கிக்கொள்வார்கள்; அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
- தாமஸ்

கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியில்லாவிட்டால் செயலும் சரியானதாயிருக்க முடியாது.
- எட்வர்ட்ஸ்

எல்லாம் வேடிக்கைதான்; நமக்கு நடக்காமல் மற்றவர்க்கு நடக்கும் வரை.
- வில் ரோலார்ஸ்

நட்சத்திரங்களை பறிக்க கையை நீட்டுகிற மனிதன், தன் காலருகே பூத்திருக்கும் மலர்களை மறந்து விடுகிறான்.
- ஜெர்மிபென்தாம்

சாமான்ய மனிதனின் வாழ்வில் உள்ள மாயையை அகற்றிவிட்டால் அவர்கள் வாழ்வின் இன்பத்தையும் அகற்றி விட்டதாகிவிடும்.
- ஹென்றி இப்சன்

முயற்சி எல்லா வேலைகளிலும் இன்பம் பயப்பதில்லை. ஆனால், முயற்சியின்றி இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை.
- பெஞ்சமின் டிஸ்ரேலி

சந்தோசம் வரும் போது, அதைப்பற்றிச் சிந்தனை செய்யாதே; அது போகின்ற போது, அதைப்பற்றிய சிந்தனை செய்.
- அரிஸ்டாடில்

மனிதர்களின் நடத்தையில்தான் அதிர்ஷ்டம் உள்ளது; தலைவிதியில் அல்ல.
- இங்கர்சால்

சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது.
- டால்ஸ்டாய்

நிகழ்காலமான இன்று வாழ்வதற்கு பழகுங்கள். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம்.
- பகவான் ஸ்ரீரமணர்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.