உலகை மாற்ற நினைப்பவர்கள் யார்?

தான் பாவி என்பதை ஒத்துக்கொள்ளுவதல்ல, பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புதலே ஒரு தேவனுடைய பிள்ளையை உலகத்தாரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
- ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்.

வற்றிப் போனால்தான், கிணற்றின் அருமை தெரியும்.
- பிராங்க்ளின்.

தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
- போவீ.

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேப் போன்று வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.
- அரிஸ்டாட்டில்.

நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும்தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியஸ்.

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்திப் பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்.

உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்.
- ஸ்ரீ அன்னை.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்.

நீ என்ன நினைக்கிறாயோ, அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்.
- கிரந்தம்.

பிறர் பாரத்தை தாங்கக் கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானேக் குறைந்துவிடும்.
- அவ்பரி.

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது.
- பீட்டர்.

மனிதனின் கண்டுப்பிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே...
– ஐன்ஸ்டீன்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்.
- ஆமி மோரின்.

ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்.
- ஹரியட் பீச்சர் ஸ்டோ.

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
- ஹெய்டி ஜான்சன்.

எப்போதும் நம்மால் சரியான முடிவை எடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நாம் தவறு செய்யலாம். தோல்வியை புரிந்து கொள்வது வெற்றிக்கு எதிரானது அல்ல, வெற்றியின் ஒரு பகுதி.
- ஆரியானா ஹபிங்க்டன்.

ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்.
– ரெபேகா வுட்ஸ்டாக்.

என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு! ஆனால், நான் ஒரு முறைகூட முயற்சியைக் கைவிடவில்லை!
– எடிசன்.

நீ வெற்றி பெற்றுவிட்டால் யாருக்கும் விளக்கம் சொல்லத்தேவை இல்லை! தோல்வி அடைந்து விட்டால் விளக்கங்கள் சொல்ல நீயே தேவை இல்லை!
– ஹிட்லர்.

எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்…
– ஆபிரகாம் லிங்கன்.

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
- சுவாமி விவேகானந்தர்.

பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள்.
- புத்தர்.

தன்னால் இந்த உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்குப் பைத்தியக்காரத்தனம் உடையவர்கள்தான், இந்த உலகை மாற்றுகிறார்கள்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்.

நம்பிக்கையாளர்கள் மற்றும் அவநம்பிக்கையாளர்கள் இருவருமே சமூகத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள். நம்பிக்கையாளர் விமானத்தை கண்டுபிடிக்கிறார், அவநம்பிக்கையாளர் பாராசூட்டைக் கண்டுபிடிக்கிறார்.
- ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்.
- சிம்மன்ஸ்.

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
- ஜான்மில்டன்.

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
- நியேட்சே.

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.

அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.

சட்டம் மதிப்புக்குரியது. காரணம் அது சட்டம் என்பதால் அல்ல, அதில் நியாயம் இருக்கிறது என்பதால்...
- பிரான்சிஸ் பேகன்.
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.