நாயை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்?
உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்.
- ஜெரேமி டெயிலர்
அதிர்ஷ்டம் என்பது பொருளற்ற சொல்; எந்த விசயமும் காரணமின்றி இல்லை.
- வால்டேர்
அவநம்பிக்கை புகார் செய்கின்றது; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்க்கின்றது; யதார்த்தம் சிக்கலை சரி செய்கின்றது.
- வில்லியம் ஆர்தர் வார்ட்
அனுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை.
- கார்லைல்
புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு நெருக்கடியையும் தட்டிக் கழிக்காமல் சந்திப்பதே முதிர்ச்சியின் அறிகுறி.
- பிரிட்ஸ் குன்கெல்
நம்மால் செய்ய இயன்றதைச் செய்யும்படி தூண்ட ஒருவர் இல்லாததே நம் வாழ்வில் பெரும் குறையாக அமைந்து விடுகிறது.
- எமர்சன்
அன்புடன் கேட்க வேண்டும்; புத்திசாலித்தனமாக பதில் சொல்லவேண்டும்; நிதானமாக யோசிக்கவேண்டும்; பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.
- சாக்ரடீஸ்
இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.
- அன்னை தெரசா
தான் நேசிக்கப்படவில்லை என்று நினைக்கிறவர்களே பொறாமையாளர்களாக மாறுகிறார்கள்.
- பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
வலிமையையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட, பொறுமையம் காலமும் அதிகமாக சாதித்து விடும்.
- லாபென்டெயின்
அழகான சோம்பேறிப் பெண்ணை விட, துறுதுறுவென்ற சுமாரான பெண்ணுக்குத்தான் கவர்ச்சி அதிகம்.
- ஜாக்சன்
கறையில்லா இதயம்தான் கலக்கமில்லா அமைதியை அறிய வல்லது.
- கதே
புரியாத விஷயத்தைப் புகழ்வது தவறு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தவறு.
- லியனார்டோ டாவின்சி
இந்த உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்து காட்டும் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடக்கிறது என்றே அறியாமல் இருப்பவர்கள் மிகப் பலர்.
- பட்லர்
உரையாடல் என்பது அறிவு பூர்வமான பரிவர்த்தனை; தர்க்கம் செய்வது அறியாமையின் பரிவர்த்தனை.
- பில் கோல்ட்
பெரும்பாலும் முதல் சிந்தனை தெளிவற்றதாக இருக்கும்; எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்.
- ஷேக்ஸ்பியர்
நாயைப் பலரும் விரும்பக் காரணம் என்ன? அது நாக்கை ஆட்டாமல் வாலை ஆட்டுவதுதான்.
- கிம்சன்
நெற்றியைக் காயப் படுத்துவதை விட, முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
- பெர்னாட்ஷா
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
- சிசரோ
அவலட்சணமான பெண் என்று ஒருத்தியும் கிடையாது. அழகாக எப்படி தோற்றமளிப்பது என்று தெரியாத பெண்கள் தான் உண்டு.
- ஜெரியர்
வயது செல்லச் செல்லத் தோல் சுருங்குகிறது; ஆனால், மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது.
- சாமுவேல் ஸ்மைல்ஸ்
உனக்கு விருப்பமானவற்றை வாங்காதே; உனக்குத் தேவையானதை வாங்கு.
- கேட்டோ
எண்ணத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதை விட, வசதிகளுக்கேற்ப எண்ணங்களைக் குறைப்பது நலம்.
- அரிஸ்டாட்டில்
மேலே ஏறும் போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள்; ஏனெனில் கீழே இறங்கும் போதும் அவர்களைத்தான் நீங்கள் சந்திப்பீர்கள்.
- மிஸ்னர்
சூரியனை முழுதாக மறைக்க ஒரே மேகம் போதும்.
- புல்லர்
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
- ரூசோ
தான் கூவுவதைக் கேட்பதற்காகவேச் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால், அது தான் அகந்தை.
- ஜார்ஜ் எலியட்
மனிதனால் ஒரு புழுவைக் கூடப் படைக்க முடியாது; ஆனால், அவன் எண்ணற்ற கடவுள்களைப் படைத்து விடுகிறான்.
- வில்லியம்ஸ்
மனிதனுக்குத் துன்பமும் நோயும் இருக்கிற வரை, இறை நம்பிக்கையும் சோதிட நம்பிக்கையும் போகாது.
- விவேகானந்தர்
ஒரு காரியத்தை ஏன் தவறாகச் செய்தோம் என்று சொல்வதற்குப் பதில் அதைச் சரியாகச் செய்து விடலாம்.
- இங்கர்சால்
தவறு நேருவதால் இழிவு இல்லை. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு.
- ஹென்றி போர்ட்
மற்றவர்களைச் சிறிதும் மதிக்காமல் தம்மைப் பற்றி மட்டுமே உயர்வாக நினைப்பவர்கள் எப்போதும் தனியாகவே இருப்பார்கள்.
- கிளாரிமன்
தீயவனை நண்பனாக்கிக் கொள்வதை விட, தனிமையை நண்பனாக்கிக் கொள்வது மேல்.
- முகமது நபி
முன்னேற வேண்டுமானால் உங்கள் கால்களால் நடந்து போங்கள். பிறர் முதுகின் மேல் சவாரி செய்யாதீர்கள்.
- காஸ்ட்ரோ
சுய மரியாதைதான் மதத்திற்கு அடுத்தபடியாக பாவங்களைத் தடுக்கப் பயன்படும் கடிவாளமாகத் திகழ்கிறது.
- பேக்கன்
நாம் பெறாதப் பதவிகளுக்குத் தகுதியுடையவர் போலத் தோற்றமளிப்பது எளிது; நாம் பெற்றிருக்கும் பதவிக்குத் தகுதியுடையவர் எனத் தோன்றுவது அரிது.
- ராச்போகால்ட்
பலவீனமானவர்களின் வழியில் தடைக் கல்லாய் இருப்பவை, பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாகவே இருக்கும்.
- கார்லைல்
நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால், நமது உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது.
- அறிஞர் அண்ணா
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.