வயதானவர் இளம் பெண்ணை மணக்கலாமா?

பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்; ஏழைகள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
- டீன் அச்சீசன்

சூழ்நிலைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
- பெர்னாட்ஷா

வறுமையேப் புரட்சிக்கும் குற்றங்களுக்கும் தாயகம்.
- அரிஸ்டாட்டில்

தாழ்ந்த லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி பெறுவதே மேல்.
- பிரவுனிங்

உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர, உள்ளே நுழைந்து விடத் துணியாது.
- பிராங்க்ளின்

ஒரு மனிதனின் விதி அவனது எதிர்காலத்தில் அல்ல, அவனின் கடந்த காலத்தில்தான் உள்ளது.
- எல்லிஸ்

இறைவனின் படைப்புகள் அனைத்திலும் ஏழை என்று அழைக்கப்படுபவன் மனிதன் மட்டுமே.
- கார்லைல்

வெற்றி என்பது குறிக்கோள் அன்று; அது ஒரு பயணமேயாகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
- இங்கர்சால்

எவனொருவன் தனக்குத்தானேக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றைக் கடைப்பிடித்து வாழ்கிறானோ, அவனே சுதந்திரமானவன்.
- மகாத்மா காந்தி

எஜமானனுக்கு கடன்கள் ஏறிவிட்டால், வேலைக்காரர்கள் திருடர்கள் ஆவார்கள்.
- ஜார்ஜ் சாவா

நெருப்பு வழி செல்பவன், புகைக்கு அஞ்ச மாட்டான்.
- டெனிசன்

ஒரு விவாதம் நீண்டு கொண்டே போகிறது எனில் அதில் பங்கு கொண்ட இரு தரப்பினரின் மீதும் குற்றம் இருக்கிறது என்பது பொருள்.
- வால்டேர்

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை.
- அப்துல் கலாம்

துணிவுமிக்க மனிதனே தன் தொழிலில் ஒவ்வொரு முறையும் புதுமை படைத்து வெற்றி பெறுகின்றான்.
- டேல் டவுட்டன்

யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிகத் தாழ்ந்தவன்; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன்.
- சுவாமி விவேகானந்தர்

எஜமானன் சில வேளைகளில் பார்வையற்றவர்களாக இருக்க வேண்டும்; வேலைக்காரர்கள் சில வேளைகளில் காது கேளாதவர்களாக இருக்க வேண்டும்.
- எட்வார்ட் புல்லர்

விதி ஒரு போக்கிரிப் பையனை போன்றது; மனிதர்களின் அழகிய எண்ணங்களை அழித்து நாசம் செய்வதில்தான் அதற்கு ஆனந்தம்.
- காண்டேகர்

நம் நற்செயல்களும், நம் தீய செயல்களும், நம்மை நிழல் போல ஓயாது தொடர்ந்து வருகின்றன.
- புத்தர்

உலகச் சரித்திரத்தில் காணப்பெறும் காரியங்களெல்லாம் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே.
- எமெர்சன்

வலிமையையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட, பொறுமையம் காலமும் அதிகமாக சாதித்து விடும்.
- லாபென்டெயின்

ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்.
- சாம் போர்ட்

ஒருவனையும் நம்பாதவனை மற்றவர்கள் எதற்காகவும் நம்பப் போவதில்லை.
- வில்கி

ஒரு நொடி காலம் தான் என்றாலும், அதைத் தனக்குத் தகுந்தவாறு சாதகமாக்கிக் கொள்பவனே புத்திசாலி.
- கதே

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான்.
- டென்வஸ்

இன்பம் காண நாம் இயற்கைக்கு உண்மையாக இருந்து வயதிற்கு ஏற்ப வாழவேண்டும்.
- வில்லியம் ஹெச்விட்

வயதானவர் ஒரு இளம்பெண்ணை மணப்பது, இன்னொருவர் படிப்பதற்கு நாம் புத்தகம் வாங்குவது போல.
- எச். டபிள்யூ ஜான்சன்

சட்டம் மதிப்புக்குரியது. காரணம் அது சட்டம் என்பதால் அல்ல, அதில் நியாயம் இருக்கிறது என்பதால்.
- பிரான்சிஸ் பேகன்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.