* பக்தியைக் காட்டிலும் பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது.
* ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கின்றது.
* படுத்துக் கொண்டேப் பிரார்த்தனை செய்தால், இறைவன் உறங்கிக் கொண்டேக் கேட்பார்.
* சுவர்க்கமும் நரகமும் உன் இதயத்திலுள்ளவை.
* வக்கீல்கள் பணப்பையைக் காலி செய்கிறார்கள்; வைத்தியர்கள் வயிற்றைக் காலி செய்கிறார்கள்; பாதிரிமார்கள் ஆன்மாவைக் காலி செய்கிறார்கள்.
* போதகர்களுக்குள் சண்டை வந்து விட்டால், சயித்தானுக்குக் கொண்டாட்டம்.
* பிசாசுகளைப் பிசாசுகளைக் கொண்டே ஓட்டவேண்டும்.
* நூல் தீருகிறவரை கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்.
* விதியின் தீர்ப்பையே மனிதன் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றுகிறான்.
* அதிருஷ்டமுள்ள மனிதன் வாயைத் திறந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் போதும்.
* அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.
* ஓநாயுள்ள இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை.
* உலகம் உன்னை விடுவதற்கு முன்னால், நீ அதை விட்டுவிடு.
* ஆப்பிள் கனி மரத்திலிருந்து தொலைவில் போய் விழுவதில்லை.
* மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்.
* மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான்.
* துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
* அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
* காப்பியும் காதலும் சூடாயிருந்தால்தான் ருசி.
* காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
* அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாயும், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான்.
* கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை.
* குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான். குழந்தைகளில்லாமல் இறப்பவன் மகிழ்ச்சியை அறியான்.
* கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.
* இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள்.
* வயதானவர்களுக்குத் துாரத்துப் பார்வை அதிகம்.
* மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும்.
* நோயாளியிடம் பணம் இருப்பதற்குத் தக்கபடி பிணி நீடிக்கும்.
* விளக்கை ஏற்றுவதை விட அணைப்பது எளிது.
* வெள்ளிக் கட்டிலில் உறங்குபவன், தங்கக் கனவுகள் காண்பான்.
* பணக்காரர்களுக்கு எல்லா இடங்களும் சொந்த இடம் போன்றது.
* இறைவன் வானத்தை ஆள்கிறான், பணம் உலகத்தை ஆள்கின்றது.