* நல்ல கல்வியும் நல்ல அறிவுமே, உலகில் சிறந்த நன்மையைச் செய்ய வல்லன.
* தொலைவில் தெரிவதைப் பற்றி சிந்திக்காதவனுக்கு, துன்பம் அருகில் காத்திருக்கிறது என்பது தெரியாமலே போகிறது.
* மனிதரின் இயல்புகள் ஒரே தன்மையன. அவர்களின் பழக்க வழக்கங்கள் தான் அவர்களைப் பிரித்துப் பெரிதும் வேறுபடுத்துகின்றன.
* எதிரிகளைத் தாக்கக் கட்டப்படும் கோட்டைகளே கல்விச்சாலைகள்.
* வெற்றி அடைகிற வழி எனக்குத் தெரியாது. ஆனால், எல்லோரையும் ஒப்புக்கொள்ள வைப்பதுதான் தோல்விக்கான அஸ்திவாரம்.
* உயர்ந்த மனிதர் சொற்களில் பலவீனமாக இருந்தாலும், நடத்தையில் மிக உறுதியாக இருப்பர்.
* நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே; தூரத்திலேயே இரு. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன.
* பிறர் எனக்கு எதைச் செய்யக்கூடாது என்று விரும்புகிறேனோ, அதை அவர்களுக்கு நானும் செய்யக்கூடாது என்று விரும்புவேன்.
* சிந்திக்காமல் படிப்பது வீண்; படிக்காமல் சிந்திப்பது ஆபத்து.
* மனிதாபிமானம் என்ற நீரூற்று, கயவர்களின் நெஞ்சமான பாலைவனங்களிலும் தோன்றலாம்.
* மனத்தைக் கடமையில் செலுத்துங்கள்; ஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள்; அன்புக்குக் கட்டுப்படுங்கள்; மேலான கலைகளில் மனதைச் செலுத்தி அமைதி பெறுங்கள்.
* எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், பழைமையை ஆராய்ந்து பாருங்கள்.
* புகழைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால், புகழ் பெறுவதற்குத் தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
* சிறிய விஷயங்களில் பொறுமை காட்டா விட்டால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன.
* ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
* உங்களுக்குச் சரியான ஆலோசனை வழங்கக் கூடிய பெரிய மனிதர் உங்களைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
* கெட்ட மனிதர்களைப் பார்க்கும்போது, உங்கள் இதயத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்; நல்ல மனிதர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் பற்றி சிந்தியுங்கள். அதன் மூலம் உயர்வடையுங்கள்.
* தனக்குத் தெரிந்ததை தெரியுமென்றும், தெரியாததைத் தெரியாதென்றும் கூறுவது எதுவோ அதுதான் அறிவாகும்.
* இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு சிறிய மெழுகுவர்த்தியைத் தேட முயற்சி செய்.
* ஒருவனிடம் இருக்கும் உயர்ந்த சக்தியை கண்டுபிடித்து வளர்ப்பது நாம் கற்கும் கல்வியே ஆகும்.
* செய்யத்தக்கது இது என்று தெரிந்தும், எவன் அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே கோழை.