* எவனொருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ அவன் பிறரால் உயர்த்தப்படுவான்.
* நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் உங்களுக்கு யார் தீமை செய்யப் போகிறார்கள்.
* தன்னைப் புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான்; பணிவு உடையவன் புகழப்படுவான்.
* அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
* உங்கள் விரோதிகளை நேசியுங்கள்; உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* உங்களில் தலைவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.
* எல்லோரும் பணிவு உடையவராக இருங்கள், கடவுள் செருக்கு உடையவரை விரும்புவதில்லை.
* கவலைப்படுவதன் மூலம் உங்களில் யாராவது ஒரு முழமேனும் உயர்ந்து விட முடியாது.
* நானே நானாயிருக்கிறேன்; அமைதி மயமாய் நின்று நானே பரம்பொருள் என்று உணர்.
* மாபெரும் செல்வத்தை விட, நல்ல பெயர் சிறந்தது.
* அறிவுக்கு முன்னது அகந்தை, விழுதலுக்கு முன்னது மன மேட்டினம்.
* கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டறிவீர், தட்டுங்கள் திறக்கப்படும்.
* நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, "கடலில் பெயர்ந்து விழு'' என்றாலும் அப்படியே நடக்கும்.
* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
* ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உன் மறு கன்னத்தை காட்டு.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதே செய்.
* அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்தி விட வல்லது.
* கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
* செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் காரணம்.
* அன்பான வார்த்தை நிறைய பலன் கொடுக்கும். கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
* நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.