- மான்டெய்ன்
உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம்.
- கதே
வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந்தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.
- ரூக்கர்ட்
நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ, அதையேக் கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.
- ஜெரிமி டெய்லர்
உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது.
- பிஷப் வில்ஸன்
நீண்ட காலம் வாழவேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே.
- ஹீஜிஸ்
வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம்.
- வால்ப்போல்
தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான்.
- டிலட்ஸன்
அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.
- ரஸ்கின்
ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.
- ஆவ்பரி
தன்னந் தனியாய் நிற்பவனை விட, அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது.
- இப்ஸன்
பணம், படிப்பு, பதவி முதலியவைகளில் பிறரைப் போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால், கடவுளோ துன்பத்தையும், தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார்.
- எமர்ஸன்
உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.
- கார்லைல்
ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.
- டெனிஸன்
குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.
- லா புரூயர்
தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.
- ஸெனீக்கா
பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை.
- டானியல்
இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.
- ஹெர்பர்ட்
பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.
- ஹெச்.ஏ
.
சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும்.
- அடிஸன்
கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதை அயோக்கியர்க்கு அளித்திருக்க மாட்டார்.
- ஸ்பிப்ட்
அதிர்ஷ்ட தேவதையை நழுவ விட்டுவிட்டால் அவளை மறுபடியும் ஒருநாளும் காண முடியாமற் போய்விடும்.
- கெளலி