வாழ்க்கையின் முடிவுரை
இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.
– பியர்ல் எஸ். பக்
இதயம் எல்லாக் காலத்திலும் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாததாகவே இருக்கிறது.
– ஹென்றி டேவிட் தோரே
காதல் போரைப் போன்றது. எளிதாக ஆரம்பித்துவிடலாம். நிறுத்துவது மிகக் கடினம்.
– ஹெச். எல். மென்கென்
எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அதை ஆணிடம் சொல்லுங்கள். ஏதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்.
– மார்கரெட் தாட்சர்
நாளை இறந்து விடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படிக் கற்றுக் கொள்வீர்களோ அப்படிக் கற்றுக் கொள்ளுங்கள்!
– மகாத்மா காந்தி
இன்னும் மீதமிருக்கும் அழகான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேனே தவிர, நான் எல்லாத் துன்பங்களையும் நினைத்து குழப்பிக் கொள்வதில்லை.
– ஆன் ஃபிராங்க்
வாழ்க்கையின் முடிவுரைதான் முதுமை.
– எமிலியா பார்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க தற்செயலானதே!
– ஜேன் ஆஸ்டன்
அமைதி ஒரு புன்னகையில்தான் தொடங்குகிறது.
– அன்னை தெரசா
அறிவு உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்; ஆனால், குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும்.
– புரூஸ் லீ
காதல் என்பது வைரஸ் மாதிரி. அது யாருக்கும் எந்த நேரத்திலும் தொற்றிக் கொள்ளும்.
– மாயா ஏஞ்சலோ
மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள்; ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்.
– இந்திராகாந்தி
எது எனக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறதோ, அதுதான் என்னை அழிக்கவும் செய்கிறது.
– ஏஞ்சலினா ஜோலி
நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
– புத்தர்
வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.
– ஹெலன் கெல்லர்
நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்; பயம் எதிரியையும் செயல்பட வைக்கும்.
– ஜோயல் ஆஸ்டீன்
மூன்று விஷயங்களை நெடுநாட்களுக்கு மறைக்க முடியாது. சூரியன், நிலா மற்றும் உண்மை.
– புத்தர்
ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்க எனக்கு 6 மணி நேரம் போதுமானது. அதில் முதல் நான்கு மணி நேரத்தைக் கோடரியை கூர் தீட்டுவதற்காகச் செலவழிப்பேன்.
– ஆபிரஹாம் லிங்கன்
கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தரும் பழம் இனிப்பு நிறைந்தது.
– அரிஸ்டாடில்
எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
– மகாத்மா காந்தி
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.