* அறிவின் வழியே அறவழியாகும்
* ஆலயம் தொழுவது சாலவும் தீது
* இறைவன் என்பது இயற்கையேயாகும்
* ஈசன் என்பவன் நீசனேயாவான்
* உன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை
* ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே
* எல்லாம் உன் செயல் என்பதை நீ அறி
* ஏழை என்பவன் கோழையே ஆவான்
* ஒதுங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்
* ஓதுவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்
* கடவுள் என்பது கயவர்கள் கற்பனை
* காசிக்குப் போவது காசுக்கு நட்டமே
* கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை
* கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
* குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்
* கூடி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்
* கெட்டாலும் மானம் விட்டுக் கெடாதே
* கேள்வி ஞானமே கேடிலா ஞானம்
* கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை
* கொடுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்
* கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு
* சரித்திரம் அறிந்தவன் சாத்திரம் பேசான்
* சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
* சிந்தனைச் செல்வமே சிறந்த செல்வம்
* சீவனை விட்ட பின் சிரார்த்தம் எதற்கு?
* சுகமென்று எதுவும் சொர்க்கத்தில் இல்லை
* சூட்சுமம் என்பது சூழ்ச்சியே யாகும்
* செத்ததும் விடுவான் மருத்துவன்; செத்தாலும் விடான் புரோகிதன்
* சேக்கிழார் செய்ததே சிவனார் லீலைகள்
* சொர்க்கம் என்பது சுரண்டி வாழ்வதற்கே
* சோதிடம் சொல்வது சோற்றுக்கு என்று அறி
* பகுத்தறிவாளர் பஞ்சாங்கம் பாரார்
* பாம்புக்கு நஞ்சு பல்லில்; பார்ப்பனனுக்கு நஞ்சு நெஞ்சில்
* பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இல்லை
* பீடை என்பது பிராமணீயமே
* புதுமையை விரும்பிப் பழைமையை மறப்பாய்
* பூணூலை அணிந்தவன் புனிதன் ஆகான்
* பெருமை பெற நில்
* பேதமை அகற்று
* பொறுத்தார் ஆளும் பூமி மயானமே
* போர்த்திறன் போற்றி வாழ்
* மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
* மானம் போகும் மக்கள் மிகப் பெறின்
* மிச்சம் பிடித்து வாழ்; மீளக் கடன் இரா
* மீசை வைக்க ஆசைகொள் தமிழா!
* முக்தியால் வளர்வது மூடத்தனமே
* மூர்க்கனே மேல் முட்டாளைக் காட்டிலும்!
* மென்மையின் பேரால் பெண்மை இழந்தது வன்மையே ஆகும்
* மேட்டுக் குடியெலாம் மேற்குடி ஆகா
* மொட்டையும் கொட்டையும் மோட்சத்தைக் காட்டா!
* மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
* யக்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே
* யாதும் ஊரென வாழ்ந்தது போதும்
* யுக்தி என்பது குயுக்தியே யாகும்
* யூகங்களெல்லாம் உண்மைகள் ஆகா
* ரசாபாசத்துக்கே ராமனும் தருமனும்
* ராவண காவியம் ரசித்துப் படிப்பாய்
* வம்புக்கு அஞ்சி வறுமையில் வாடேல்
* வாதம் புரிவதில் வல்லமை பெறுவாய்
* விரக்திக்கு அடிப்படை விதியேயாகும்
* வீழ்ச்சி என்பது வீரனுக்கு இல்லை
* வெற்றி நிச்சயம் விடாமல் முயன்றால்
* வேதத்தால் வளர்வது விதண்டா வாதமே
* வையகம் வாழ வைதீகம் வேண்டாம்